Rowdy Durai : “எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரையின் காதலி கைது” எதற்காக தெரியுமா..?
என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி துரையின் அக்கா மற்றும் ரகசிய காதலி ஆகியோரை திருச்சி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை முழுமையாக தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக திருட்டு கொலை கொள்ளை வழிப்பறி ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும் திருச்சி மாவட்டம் முழுவதும் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து குற்றம் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
எண்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி துரை
இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவரை கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் என்கவுண்டில் சுட்டுக் கொன்றனர். இதனை தொடர்ந்து திருச்சி எட்டரை கிராமம், பாறைக்குளம் பகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) MGR நகர் துரையின் காதலி அனுராதா ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக சில குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் துரையை காவல்துறையினர் பிடித்ததற்கு நீ தான் காரணம் என்று கூறி, கடந்த 5 ஆம் தேதி இரவு முருகேசன் வீட்டிற்கு இருவரும் வந்து முருகேசனை கட்டையால் தாக்கினர். மேலும் அவர் வீட்டில் வைத்திருந்த செல்போன், PAN கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பணம் ரூ.8000 மற்றும் தங்க செயின் ஆகியவற்றை மிரட்டி பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
துரையின் அக்காவும் காதலியும் கைது
இதனை தொடர்ந்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு சோமரசம்பேட்டை காவல் நிலையம்) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் சசிகலா மற்றும் அனுராதா ஆகியோர் சண்முகா நகரில் உள்ள அனுராதா வீட்டில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் போலீசார் விரைந்து அந்த இடத்திற்கு சென்றனர். மேலும், நாச்சிக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் கைது செய்தனர்.
சோதனையில் சிக்கிய தொகை
இதனை தொடர்ந்து வீட்டை சோதனை செய்தபோது, ஒரு பையில் மொத்தம் 11,31,280 ரூபாய் இருந்ததையும் பார்த்து வருமான வரித்துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பணத்தை முழுவதுமாக பறிமுதல் செய்தனர்.
மேலும், மேற்கண்ட முருகேசனின் திருட்டு போன செல்போன், ஆதார் கார்டு ரேஷன் கார்டு, PAN கார்டு, மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை, தங்கச்செயின் மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கட்டையையும்
கைப்பற்றினர். மேலும் போலீசார் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாகவும் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.