மேலும் அறிய

“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரிப்பா, லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் பதிவால் பெரும் பரபரப்பைபடுத்தியுள்ளது.

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  கடிதம் எழுதியது திருச்சியில்  திமுகவினர் மத்தியில் பெருன் அதிர்வலை ஏற்படுத்தியது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று கேன்.என்.நேரு தரப்பே ஆர்டர் போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

அமைச்சர் நேருவின் ஆதரவாளராக இருந்த சௌந்தரபாண்டியனுக்கு தேர்தலில் போடியிட வாய்ப்பு .. 

கே.என்.நேரு முதன் முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது  இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான கானக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான்.  

அவர் நான்கு முறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறது.

“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

தான் இறந்துவிட்டதாக தானே பதிவிட்ட திமுக  எம்.எல்.ஏ வால் பரபரப்பு 

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு , தொகுதியின் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு அழைப்புதல் விடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும் ,அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு கொடுக்கவில்லை. 

அரசு அதிகாரிகளோ அல்லது அமைச்சர் நேரு அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் எம்.எல்.ஏ வை ,  ஓரங்கட்டுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் நேருவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் , சமூக வலைதளத்தில் தான் இறந்து விட்டதாக தானே பதிவிட்டது திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நாம் எம்.எல்.ஏ சௌந்தர் பாண்டியனிடம் கேட்டபோது.. நான் தான் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். மேலும் விரிவாக பேச விரும்பவில்லை என ABP NADU செய்தி நிறுவனத்திற்கு பிரத்தியேகமாக தெரிவித்தார்

“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி - அமைச்சர் நேரு இடையே மோதல்...

அமைச்சர் கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளரும் விசுவாசியா செயல்பட்டு வந்தவர் பழனியாண்டி ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எல்ஏ பழனியாண்டி நடத்தி வந்த கல்வாரியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இந்த செய்தி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முறைகேடில் ஈடுபட்ட பழனியாண்டி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ பழனியாண்டி கூறியது.. நான் இந்த சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் அமைச்சர் கே.என்.நேரு தான், அவர் தான் அனைத்திற்கும் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் நேருவும், எம்எல்ஏ பழனியாண்டியும் எதிரும் புதிருமாக அமர்ந்திருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் அடுத்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் பழனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கப்படாது ,என உறுதி செய்யப்பட்டு விட்டதாக திருச்சி அறிவாலயம் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். 

திருச்சி என்றாலே திமுகவின் கோட்டையாக திகழ்ந்துவரும் நிலையில் தொடர்ந்து உட்கட்சி பூசல் அதிகரிப்பதால், இவை அனைத்தும் வருகின்ற தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகமும், அச்சமும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Greenland Denmark: கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்து விவகாரம்; “டென்மார்க் கோட்டை விட்டுடுச்சு, நான் செஞ்சு முடிப்பேன்“ - ட்ரம்ப் பதிவு
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
தேமுதிகவின் எதிர்காலம்: அதிமுக, திமுக இடையே சிக்கிய விஜயகாந்தின் கட்சி! 2026 கூட்டணி யாருடன்? பரபரப்பு தகவல்!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ் மகள்? பிரசாந்த் கிஷோருடன் தீவிர ஆலோசனை!
கோலியின் சத வேட்டை: சச்சினின்
கோலியின் சத வேட்டை: சச்சினின் "நூறு சதங்கள்" சாதனையை முறியடிக்க இன்னும் எத்தனை சதங்கள் தேவை?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
AI படுத்தும் பாடு; வீடியோல எது உண்மை, எது பொய்.? எப்படி கண்டுபிடிக்கறது.?
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
Modi Vs Trump Tariff: ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ட்ரம்ப்பிற்கு எதிர்பாராத ஆப்பு வைத்த மோடி; அலறித் துடிக்கும் அமெரிக்க பருப்பு வியாபாரிகள்; என்ன பிரச்னை.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
Embed widget