மேலும் அறிய

குழந்தை விற்பனை விவகாரம்: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய புரோக்கர் திடுக்கிடும் தகவல்

திருச்சி அருகே குழந்தை விற்பனை விவகாரம், தனிப்படை போலீசாரிடம் சிக்கிய புரோக்கர். விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

திருச்சி மாவட்டம் , லால்குடி மங்கமாள்புரத்தை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கும் லால்குடி பகுதியில் வக்கீலாக பணிபுரிந்த பிரபு என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ஜானகி கர்ப்பமானார். இதையடுத்து ஜானகியை வக்கீல் பிரபுவும், அவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளியும், குழந்தை பிறந்தவுடன் அதனை விற்று காசு பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தி உள்ளனர். அதன்படி ஜானகிக்கு பிறந்த பெண் குழந்தையை பிரபு வாங்கி சென்று ரூ.3.50 லட்சத்துக்கு விற்றுள்ளார். ஆனால் 1 லட்சத்திற்கு குழந்தையை விற்றதாக கூறி ரூ.20 ஆயிரத்தை கமிஷனாக எடுத்துக்கொண்டு ரூ.80 ஆயிரத்தை ஜானகியிடம் கொடுத்துள்ளார். இதனை மோப்பம் பிடித்த மற்றொரு வக்கீல் குழந்தை ரூ.3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டதை ஜானகியிடம் கூறவே, ஆத்திரம் அடைந்த ஜானகி பிரபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் குழந்தையை காணவில்லை என்று ஐகோர்டில் ஜானகி மனுதாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது குழந்தை விற்கப்பட்டதை அறிந்த நீதிபதி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் காரணமாக ஜானகி, பிரபு, அவரின் 2-வது மனைவி சண்முகவள்ளி, கார் டிரைவர் ஆகாஷ், குழந்தையை வாங்கி விற்ற உறையூரை சேர்ந்த புரோக்கர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் விற்கப்பட்ட குழந்தையை மீட்பதற்கு டி.எஸ்.பி. அஜய்தங்கம் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்றது. தனிப்படை நடத்திய விசாரணையில் குழந்தை டெல்லியில் உள்ள குழந்தை புரோக்கர் ஒருவரிடம் விற்கப்பட்டது தெரிய வந்தது.

குழந்தை விற்பனை விவகாரம்: தனிப்படை போலீசாரிடம் சிக்கிய புரோக்கர் திடுக்கிடும் தகவல்

இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில், பிரெட்ரிக், பாண்டியராஜன், அபுதாகீர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி சென்று கடந்த ஒரு வார காலமாக முகாமிட்டு உள்ளனர். தொடர் தேடுதல் வேட்டையில் குழந்தை புரோக்கர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவரை சுற்றி நடத்திய ரகசிய விசாரணையில் குழந்தை வெளிநாட்டிற்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. குழந்தையை மீட்கும் நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே டெல்லியில் குழந்தை புரோக்கர் விரைவில் கைது செய்யப்பட்டு திருச்சிக்கு அழைத்து வரப்பட உள்ளதாகவும், குழந்தையும் மீட்கப்படலாம் என்றும் போலீசார் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget