மேலும் அறிய

சந்திரயான் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பூமிக்கு எடுத்துவரும் - மயில்சாமி அண்ணாதுரை

எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை பேசியது: சந்திராயன்- 3 நிலவை நெருங்கி உள்ளது. அது சமயம் நிலாவும் உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேசினேன்.  1960 களில் அமெரிக்க - ரஷ்யா  இடையே நிலவு பயணம் பனிபோர் உட்சத்தில் இருந்தது. தற்போது திரும்ப நிலவை நோக்கிய பயணம் என்பதற்கு விதை போட்டது சந்திராயன்- 1, நிலவில் நீர் கண்டு பிடித்தது.  ஆகையால் திரும்பவும் அனைவரும் நிலவை  தாண்டி நிலவின் தென் துருவம் இடத்தை நோக்கி உலக நாடுகள் ரஷ்ய அமெரிக்கா, ஜப்பான், கொரியா, வளைகுடா நாடுகள் வர உள்ளது.  இந்த பயணம் உலக நாடுகள் அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்தாக இருக்கும். வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானது. அதேபோல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம். நிலவை சந்திராயன்  நெருங்கிக் கொண்டிருக்கிறது.   நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

சந்திரயான் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பூமிக்கு எடுத்துவரும் - மயில்சாமி அண்ணாதுரை

மேலும், பல நாடுகளும் இதற்கான பயணத்தை தொடங்கியுள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது. அறிவியல் அடுத்த கட்டமாக போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்கு செல்லும் வகையில் இம்முயற்சி அமையும். நிலாவை விண்வெளியில்  பிரிக்கப்பட்ட  இன்னொரு கண்டமாக நான் பார்க்கிறேன். இந்தியாவை கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தது போல , அமெரிக்க கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீர் வளத்தை கண்டுபிடித்து உள்ளோம். எனவே இந்தியா கண்டுபிடித்த இன்னொரு அமெரிக்காவாக நிலவை பார்க்கிறேன்.  மேலும் நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முன்னெடுப்பில் உள்ளது. அதில் இந்தியாவும் பங்குபெறும் , இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும். உலக அமைதிக்கான இடமாக நிலவு இருக்கும். அதில் இந்தியா முன்னோடியாக  விளங்கும். அனைத்தும் நல்ல படியாக உள்ளது. சந்திராயன் இறங்கக்கூடிய இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக பார்த்துள்ளோம் .

சந்திரயான் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பூமிக்கு எடுத்துவரும் - மயில்சாமி அண்ணாதுரை

மேலும், சந்திராயன், லூனா இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தற்போது உள்ளது. விண்வெளி கழிவுகளால் செயற்கை கோள்கள் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே செயற்கைக்கோள்களை அனுப்பிய அந்தந்த நாடுகள் விண்வெளி கழிவுகளை அகற்ற முன்வர வேண்டும். இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. எனவே தான் PSLV, GSLV ராக்கெட்டுகளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம் என்றார். சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும்  பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து  வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget