மேலும் அறிய

Bird park in Trichy: திருச்சியில் பறவைகள் பூங்கா விரைவில் திறப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

தமிழ்நாடின் மத்திய பகுதியாக விளங்கும் திருச்சி மாவட்டம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் முக்கொம்பு அணைப் பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா கட்டப்பட்டது. இவற்றை தவிர்த்து எந்த ஒரு பொழுதுபோக்கு இடங்கள் திருச்சியில் இல்லை. இந்நிலையில் இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின் பேரில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குடமுருட்டி காவிரிக்கரையில் பறவைகள் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முயற்ச்சியில் இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 13 கோடி ரூபாய் இதற்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பூங்காவில் புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

Bird park in Trichy: திருச்சியில் பறவைகள் பூங்கா விரைவில் திறப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழலான இடங்கள் மட்டுமல்லாது 7டி திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெறவுள்ளன. இந்த பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Bird park in Trichy: திருச்சியில் பறவைகள் பூங்கா விரைவில் திறப்பு - மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது..

இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள். நீரூற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், வரைப்படங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு 7D திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்பொழுது இப்பூங்காவில் 50 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவாக பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE:நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Breaking News LIVE: நாகையில் கள்ளச்சாராயம் விற்ற 21 பேர் கைது - போலீஸ் அதிரடி
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Embed widget