மேலும் அறிய

விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது - அய்யாகண்ணு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் - அய்யாகண்ணு

திருச்சி மாவட்டம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையிலும், மாநில நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, மேகராஜ், வழக்கறிஞர் முத்துசாமி, முன்னிலையில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. 

இரண்டு மடங்கு இலாபகரமான விலையை விவசாய விளை பொருட்களுக்கு பெறுவது, இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டியும்,  விவசாய உணவு பொருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்றும், கோதாவரி - காவிரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், மேலும், மாதம் ரூ.500 கொடுக்கும் விவசாய உதவி தொகையை ரூ.5,000 மாக உயர்த்தி கொடுக்க வேண்டுமென்றும், மேற்கண்ட கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் இந்தியா பிரதமர் மோடி  போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவது என்றும்.

விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது - அய்யாகண்ணு குற்றச்சாட்டு

மேலும், குளித்தலையிலிருந்து குமாரவேலு தலைமையில் சென்னைக்கு வருகின்ற 25.12.2023ம் தேதி கிளம்பும் நடை பயணத்தில் கலந்துக்கொள்ளுவது என்றும்.காவிரி -அய்யாறு இணைப்பு வேண்டியும். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பொன்னனியாறு டேமுக்கு கால்வாய் வெட்டி தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி விவசாயிகளை காப்பாற்ற போராடுவது.காவிரி கொள்ளிடம் வழியாக  வெள்ள நீர் கடலில் சென்று கலக்காமல் காவிரியிலும், கொள்ளிடம் ஆற்றிலும், 1 கி.மீ-க்கு ஒரு தடுப்பணை என்று 100 தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீர் மட்டத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டுகிறோம்.

குறிப்பாக தனி விவசாயி பாதிக்கப்பட்டாலும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டுமென்றும். விவசாயிகள் போராட கூடாது போராடினால் குண்டர் சட்டத்திலும், விவசாய சங்கத் தலைவர்கள் மேல் 30க்கு மேல் கேஸ் போடுவதை கண்டித்து காவல்நிலையத்தில் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்பு செய்தியார்களை சந்தித்து அய்யாகண்ணு பேசுகையில், விவசாயிகளை பழிவாங்கும் எண்ணத்தில் திமுக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு  30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் அனைவரும் அடிமை என நினைத்து எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள் என்ற போக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளுக்கு  காரணம் என்னவென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம்,  உரிய பதில் கிடைக்காவிட்டால், காவல் நிலையத்தை முற்றுகையிட  தயங்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget