மேலும் அறிய

திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

ராமேசுவரத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தலைமை செயலக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் அர்பிந்குமார் (வயது 42). இவர் திருச்சி ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 8 ஆண்டுகளாக தனது குடும்பத்தினருடன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22662) ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் நள்ளிரவு 1.15 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்து, பின்னர் 1.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதே ரயிலில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராமலிங்க அடிகளார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அந்த ரயில் விருத்தாசலம் அருகே சென்றபோது டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாருக்கும், கிருஷ்ணமூர்த்திக்கும் இருக்கையில் அமர்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமாரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

மேலும் இந்த சம்பவம் குறித்து, அர்பிந்குமார் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே போலீசிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் விழுப்புரத்தில் இருந்து விசாரணைக்காக, ரயில்வே போலீசார் திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் முன்னிலையில் திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளான ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் நிருபர்களிடம் கூறும்போது, சேது அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள எஸ் 10 பெட்டியில் 8-வது இருக்கையில் இருக்க வேண்டிய கிருஷ்ணமூர்த்தி என்ற பயணி குடிபோதையில் தனது உடைமைகளை இருக்கையில் வைத்துவிட்டு, ரயில் பெட்டியின் கதவு அருகே நடைபாதையில் படுத்துக்கொண்டார். நடைபாதையில் மற்றவர்களுக்கு இடையூறாக படுத்து தூங்காதீர்கள் என கூறினேன். அப்போது அவர் என்னை தகாத வார்த்தைகளில் பேசியதோடு, திடீரென கன்னத்தில் அறைந்து விட்டார். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். தற்போது எழுத்துப் பூர்வமாக புகார் அளிப்பதற்காக திருச்சிக்கு வந்துள்ளேன் என்றார். அவர் திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தபோதும், பேட்டி கொடுக்கும்போதும் அழுதுகொண்டே இருந்தார். 

திருச்சி டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதலால் பரபரப்பு - தலைமை செயலக அலுவலர் கைது

இந்த நிலையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மற்றும் டி.ஆர்.ஈ.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் கூறும்போது, "எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இங்கு எந்த தொழிலாளி தாக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம். இங்கு மொழி பிரச்சினையில் டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறானது. ஆனால் இந்த விஷயத்தில் அவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராடுவோம்" என்றார். இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் அர்பிந்குமார் மீது தாக்குதல் நடத்திய கிருஷ்ணமூர்த்தியை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget