மேலும் அறிய

அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூர்- திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.

அரியலூரில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் 3 முதல் 4 டன் வரையிலான குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் அரியலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டி வைக்கப்படுவதால், பன்றி, ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உணவை தேடி வருகின்றன. இதனால் குவியலாக கொட்டி வைக்கப்படும் குப்பைகள் கால்நடைகளால் சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், காற்று வீசும் நேரத்தில் சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு இந்த குப்பைகள் குறிப்பாக பாலித்தீன் பைகள் அடித்து செல்லப்படுகிறது. சில நேரங்களில் குப்பைகள் தீப்பற்றி எரியும் போது அவ்வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

அரியலூரை அடுத்த கீழப்பழுவூரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கான கிடங்குகள் இருந்தும் அங்கு குப்பைகள் முறையாக எடுத்து செல்லப்படுவது இல்லை. தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் அரியலூர்- திருச்சி சாலையில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரியலூர்- திருச்சி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பழுவூரில் மறுசுழற்சி செய்யும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்காக கிடங்கு ஏற்படுத்தப்பட்டாலும் அங்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. நகரின் அருகிலேயே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து அரியலூர் நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பிட்ட இந்த பகுதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும், நகரில் வாகனங்களில் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நாய், பன்றி உள்ளிட்டவைகளும் இங்கு வீசப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 

அரியலூர் - திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

மேலும், மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கொட்டி மூடலாம். இதனால் சுரங்கம் மூடப்படுவதுடன், குப்பைகளும் அப்புறப்படுத்தப்படும். இனிவரும் காலங்களில் இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, அரியலூர்- திருச்சி சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பயோ மைனிங் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget