மேலும் அறிய

ஏசி பேருந்துகள் வருமா... வராதா? எதிர்பார்ப்போடு காத்திருக்கும் திருச்சி மக்கள்

வெயில் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

தஞ்சாவூர்: அறிவிச்சு அஞ்சு வருஷம் ஆகிடுச்சு... இன்னும் வரலையே என்று மக்கள் ஒரு திட்டம் குறித்து வேதனைப்படுகின்றனர். என்ன தெரியுங்களா?

திருச்சியில் ஏசி எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கும் திட்டம் 5 ஆண்டுகளாகியும் நிறைவேறவில்லை. வெயில் அதிகரித்துள்ள நிலையில், ஸ்ரீரங்கம், சமயபுரம் போன்ற வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மக்கள் இதனால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்லும் நிலை உள்ளது.
 
திருச்சியில் 64 ஏசி எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டம் போட்டு 5 வருஷம் நிறைவடைந்துள்ளது. இன்னும் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. மக்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். ஸ்ரீரங்கம், சமயபுரம் மாதிரியான வழிகளில் ஏசி பேருந்து இயக்கலாம் முக்கியமாக வெளியூர், வெளி மாநில பக்தர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். நடுத்தர மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதைதான் விரும்புகின்றனர். அதற்கு இந்த ஏசி பேருந்துகள் நிச்சயம் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுக்கும்.

தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது. 2021-ம் ஆண்டு கரூரில் இருந்து திருச்சிக்கு மாற்றிவிடப்பட்ட 2 ஏசி பேருந்துகள் ஒரு சில நாட்கள் இயங்கியது. இந்த பேருந்தானது மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் மற்றும் துவாக்குடி வரை இயக்கப்பட்டது. ஆனால் அந்த பேருந்துகள் சென்னையில் பேருந்து சேவை அதிகம் தேவைப்பட்டதால் அனுப்பப்பட்டது. அதற்கு பின்னர் இதுவரை எவ்வித ஏசி பேருந்துகளும் இயக்கத்திற்கு கொண்டு வரப்படவில்லை. 

ஸ்ரீரங்கம், சமயபுரம் மாதிரியான வழிகளில் ஏசி பேருந்து இயக்கப்படலாம் என்று கூறப்பட்டது ஆனால் அதுவும் பேச்சளவில் இருக்கிறதோ தவிர இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.  இதுகுறித்து பஸ் பயணிகள் தரப்பில் கூறியதாவது: சில முக்கியமான வழிதடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டால் அதிகளவிலான மக்கள் வருவார்கள். திருச்சியில் வெயில் அதிகளவில் இருக்கிறது. பேருந்து வசதியாக இருந்தால் நன்றாக இருக்கும். சாதாரண பேருந்துகளில் கூட நிறைய வசதி இல்ல. 

வயதானவர்கள், குழந்தைகளுடன் வருகிறவர்கள் பேருந்தில் ஏற முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் ஆட்டோவில் அதிக காசு கொடுத்து செல்கிறார்கள். மேலும் ஸ்ரீரங்கம், சமயபுரத்திற்கு வரும் வெளி மாவட்ட நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இது மிகவும் வசதியானதாக இருக்கும். முதியவர்களுடன் வரும் குடும்பத்தினரும் கோயில்களுக்கு செல்ல மிகவும் வசதியான ஒன்றாக இந்த ஏசி பேருந்துகள் அமையும். ஆனால் இது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதுதான் தற்போதைய கேள்விக்குறி.   

திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியான தகவலில், திருச்சி நகரத்தில் 22 சதவீதம் பேர் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இருசக்கர வாகனங்களில் 41 சதவீதம் பேர் பயணம் செய்கிறார்கள். அதிகளவு மக்கள் பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். கணவன், மனைவி என்றால் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று விடலாம். இதே வயதான தந்தை, தாய், மனைவி, குழந்தையுடன் செல்ல நினைப்பவர்களுக்கு பேருந்து பயணம்தான் சரியானதாக அமையும்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  தற்போதைக்கு திருச்சி மாவட்டத்துக்கு சாதாரண பேருந்துகள் இயக்கப்படலாம். ஏசி பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை செய்யப்படும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget