மேலும் அறிய

வெளிநாட்டு வேலை..தமிழகத்தை சேர்ந்தவர்களே நம்ப வைத்து ஏமாற்றம்...வாலிபர்கள் வேதனை..!

கம்போடியா நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை எனக்கூறி மோசடி செய்ததாக புதுக்கோட்டைக்கு திரும்பிய 7 வாலிபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் அனுப்பும் ஏஜெண்டாக இருந்து வருகிறார். கம்போடியா நாட்டில் முட்டை நிறுவனத்தில் மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் வேலை எனவும், கால் சென்டரில் மாதம் ரூ.90 ஆயிரம் சம்பளம் என கூறி வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருக்கிறார். இதனை நம்பி நாகுடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 41) என்பவர் பாலசுப்பிரமணியனிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கமலக்கண்ணன், மன்சூர் உள்பட 5 பேரும், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேரும், சென்னை, கோவையை சேர்ந்த தலா ஒருவரும் என பாலசுப்பிரமணியனிடம் தலா ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் 11 பேரும் கம்போடியா நாட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு வேலை எதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் தங்க வைத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வேலை எதுவும் வழங்காததால் அவர்கள் ஏஜெண்டு பாலசுப்பிரமணியனிடம் கூறி தங்களை சொந்த ஊருக்கு வர ஏற்பாடு செய்ய கூறினர். மேலும், தங்களது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து பயணத்திற்கான விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தனர். இதில் சுரேஷ், கமலக்கண்ணன் உள்பட 7 பேர் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.



வெளிநாட்டு வேலை..தமிழகத்தை சேர்ந்தவர்களே நம்ப வைத்து ஏமாற்றம்...வாலிபர்கள் வேதனை..!

இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் தங்களை கம்போடியா நாட்டில் வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, அங்கு எதுவும் வேலை வழங்காமல் மோசடியில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சொந்த ஊர் திரும்பிய சுரேஷ் கூறியதாவது: இங்கிருந்து கம்போடியா சென்றதும் அங்கு ஒரு தமிழர் விமானநிலையத்தில் எங்களை வரவேற்று ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வடமாநிலத்தினர், தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கியிருந்தனர். நாங்கள் 3-வது மாடியில் தங்க வைக்கப்பட்டோம். கம்பெனிக்காரர்கள் வந்து வேலை வழங்கி அழைத்து செல்வதாக கூறி எங்களது 11 பேரின் பாஸ்போர்ட்டுகளையும் அவர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர். நாட்கள் சென்றதே தவிர எங்களை வேலைக்கு எதுவும் அழைத்து செல்லவில்லை. இது தொடர்பாக இங்குள்ள ஏஜெண்டிடம் கேட்ட போது அவர்கள் கம்பெனிக்காரர்கள் சொல்வதை கேளுங்கள் எனக்கூறிவிட்டார். ஆனால் அங்கு எங்களிடம் வேலைக்கு விரைவில் கூப்பிடுவார்கள். வேலைக்கு செல்லாவிட்டாலும் சம்பளம் உண்டு என்றனர். ஆனால் கடந்த 2 மாதமாக எங்களை வேலைக்கு அழைத்து செல்லவில்லை. தினமும் 2 வேளை மட்டும் சாப்பாடு கொடுத்தனர்.


வெளிநாட்டு வேலை..தமிழகத்தை சேர்ந்தவர்களே நம்ப வைத்து ஏமாற்றம்...வாலிபர்கள் வேதனை..!

மேலும் எங்களிடம் தொடர்பில் இருந்து பேசியவர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் அங்கு ஏஜெண்டாக இருக்கிறார். எங்களுக்கு எதுவும் வேலை வழங்காததால் நாங்கள் சொந்த ஊர் திரும்ப தொடர்ந்து கேட்டு அடம்பிடித்து வந்தோம். இன்னும் 4 பேர் அங்கு உள்ளனர். அவர்களும் சொந்த ஊர் திரும்ப அவர்களது குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்கிருந்து செல்லும் நபர்களை அங்குள்ள ஏஜெண்டு, கம்பெனிக்காரர்களிடம் குறிப்பிட்ட தொகைக்கு விலைபேசி விடுவார்கள் போல தெரிகிறது. அவர்கள் மோசடி வேலையில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டு வேலையை நம்பி போனால் அங்கு தமிழகத்தை சேர்ந்தவர்களே நம்ப வைத்து ஏமாற்றுவது வேதனையாக உள்ளது. எங்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய ஏஜெண்டு பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளோம். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget