மேலும் அறிய

கம்போடியாவில் தமிழர்கள் 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு; மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா..?

கம்போடியாவில் தமிழகத்தை சேர்ந்த 400 பேர் உணவின்றி சிக்கி தவித்து வருவதாக விமானம் மூலம் திருச்சி திரும்பிய புதுக்கோட்டை வாலிபர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. இதனால், என்ஜினீயரிங் படித்துவிட்டு பலர் கட்டிட வேலைக்கு செல்லும் அவலநிலை தொடர்கிறது. வேறு வழியில்லாமல், குடும்ப கஷ்டம் ஆகியவற்றால் வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்று விடுகிறார்கள். அப்படி வேலை தேடி செல்பவர்களில் பலர் உரிய வேலை, குறித்த சம்பளம் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுகிறார்கள். மேலும் பலர் சுற்றுலா விசா, வணிக விசா உள்ளிட்டவைகள் மூலம் சென்று வெளிநாடுகளில் கொத்தடிமைகளாக சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் கோலாம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த கம்போடியாவில் வேலைபார்த்த புதுக்கோட்டையைச் சேர்ந்த சையது இப்ராகிம் (வயது 28) செய்தியாளர்களிடம் கூறும் போது, "நான் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா சென்றேன். என்னை திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனத்தினர் அங்கு அனுப்பி வைத்தனர். கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் என்னை 4 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்தார்.

கம்போடியாவில் தமிழர்கள் 400 பேர் உணவின்றி சிக்கி தவிப்பு; மாநில அரசு நடவடிக்கை எடுக்குமா..?

மேலும் அங்கு எனக்கு உரிய வேலை ஏதும் கொடுக்கவில்லை. ஆயிரம் டாலர் சம்பளம் கொடுப்பேன் என்று கூறிவிட்டு, சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தினர். ஏதேனும் உதவி தேவை என்று கேட்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். நான் முதலில் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினருக்கு தகவல் தெரிவித்தேன். பல்வேறு முயற்சிகளுக்கு இடையே எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் உதவியுடன் திருச்சி வந்து சேர்ந்தேன். தமிழகத்தை சேர்ந்த இன்னும் 400-க்கும் மேற்பட்டோர் கம்போடியாவில் சிக்கி தவித்து வருகின்றனர். அங்கு அவர்கள் சொல்லும் சமூக விரோத வேலையை செய்யவில்லை என்றால் அடிப்பது, உணவை கொடுக்காமல் விடுவது, மின்சாரத்தை உடலில் பாய்ச்சுவது போன்ற கொடுமைகளை செய்கின்றனர். அதற்கான வீடியோ என்னிடம் உள்ளது. துப்பாக்கி வைத்து மிரட்டுகின்றனர். இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்களே அவர்களிடம் பேச பயப்படுகிறார்கள். இப்போது தான் மீட்பதற்கு முயற்சி செய்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தி எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். கம்போடியாவில் சிக்கி உணவு இன்றி தவிப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget