கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த திருச்சியில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள்
’’திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது’’
தமிழகத்தில் பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நோய் கட்டுப்பாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி (14.01.2022) முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட், கும்பகோணம், பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி. ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு (11.01.2022) முதல் (13.01.2022) ஆகிய நாட்களிலும் மேலும் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்துக் கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட நகரங்களுக்கும் (11.01.2022) முதல் (13.01.2022) வரையும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகரபேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ற வகையில் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் (11.01.2022) முதல் (13.01.2022) வரை சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், நிருத்துறைப்பூண்டி. வேதாரணீயம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் பொங்கள் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல (16.01.2022) முதல் (18.01.2022) ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு கழகம் (கும்பகோணம்) லிட், போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகயை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதே சமயம் அரசு கூறிய விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், குறிப்பாக முக கவசம் அணிந்து பாதுகாப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடவேண்டும் எனவும், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளனர்.