மேலும் அறிய
Advertisement
திருச்சி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டத்தில் ,வெவ்வேறு விபத்துகளில் ரெயில்வே பணிமனை பெண் ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி மஞ்சுமித்ரா (வயது 39). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. மஞ்சுமித்ரா பொன்மலை ரெயில்வே பணிமனையில் டீசல் பிரிவு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் முதன்மை பணி மேலாளர் அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிதாக பணி மாறுதல் பெற்ற அலுவலகத்துக்கு பணியில் சேர நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். மேலக்கல்கண்டார் கோட்டை பகுதியில் அவர் சென்ற போது, அந்த வழியாக கீழக்கல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஞானதேசிகன் (20) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள், மஞ்சுமித்ரா சென்ற ஸ்கூட்டர் மீது நேருக்குநேர் மோதியது. இதில் நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்த மஞ்சுமித்ரா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், படுகாயம் அடைந்த ஞானதேசிகனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மஞ்சுமித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் மற்றொரு சம்பவம் :
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ராமகிரிப்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (33). எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம், இவர் மோட்டார் சைக்கிளில் சிறுகாம்பூர் அருகே உள்ள சோழங்கநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சத்திரம் பஸ் நிலையம் நோக்கி வந்த அரசு பஸ் சந்திரசேகர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரசேகரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion