மேலும் அறிய
Advertisement
17.50 லட்சம் வரிபாக்கி - புதுக்கோட்டை BSNL அலுவலகத்திற்கு சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்குரியவை வரை செலுத்த வேண்டிய சொத்துவரி 17 லட்சத்து 50 ஆயிரத்து 644 ரூபாயை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருந்துள்ளது
புதுக்கோட்டை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை உள்பட வரிகள் தொடர்பாக நிலுவை தொகை மொத்தம் ரூ.20 கோடி அளவிற்கு உள்ளது. இந்த தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாடகை பாக்கி செலுத்தப்படாத கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். புதுக்கோட்டை மேலராஜ வீதி அருகே மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த கட்டிடத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுக்குரியவை வரை செலுத்த வேண்டிய சொத்துவரி 17 லட்சத்து 50 ஆயிரத்து 644 ரூபாயை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்திருந்துள்ளது. இது தொடர்பாக நிலுவை வரி தொகையை செலுத்த கோரி பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு நகராட்சி ஆணையர் நாகராஜன் கடிதம் அனுப்பி உள்ளார். இந்த நிலையில் கடிதம் அனுப்பிய பின்பும் செலுத்தப்படாததால் தங்களது அலுவலகத்தை ஜப்தி செய்ய நேரிடும் என எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. அதன்பின்பும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சொத்துவரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ தலைமையில் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சென்றனர்.
பல முறை நோட்டிஸ் அனுப்பியும் எந்தவிதமான பதில்களும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் சட்டபடி அலுவலகத்தை சீல் வைப்பதாக கூறினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில் அலுவலகத்தில் உள்ள தொலைதொடர்பு புகார் மையம் அறையை பூட்டி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் வளாகத்தில் இருந்த கேபிள் வயர்கள், குழாய்களை பறிமுதல் செய்து லாரிகளில் நகராட்சி அலுவலகம் கொண்டு சென்றனர்.. இதனை தொடர்ந்து சொத்து வரி செலுத்தாத பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். நிறுவன உயர்அதிகாரிகளுக்கு புதுக்கோட்டை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சீல் வைக்கப்பட்டது தொடர்பாக வருவாய் ஆய்வாளர் கூறுகையில், அரசு அலுவலகமாக இருந்தாலும் நகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் நிலுவையில் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுக்கோட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஒரு அறையில் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக திருச்சியில் இருந்து பி.எஸ்.என்.எல். உயர்அதிகாரிகள் வந்து நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏற்கனவே வரி செலுத்தியிருப்பதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மாறிய பின் சொத்து வரி செலுத்தவில்லை என நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அறைக்கு வைக்கப்பட்ட சீல் நேற்று மாலை அகற்றப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சொத்து வரியை 3 நாட்களில் செலுத்துவதாக பி.எஸ்.என்.எல். தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் சீல் அகற்றப்பட்டதாக தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion