Vinayagar Chaturthi: திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக இடம் தேர்வு - லிஸ்ட் இதோ?
Vinayaka Charitra 2024 திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறியப்பட்ட நீர்நிலைகளில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்
திருவண்ணாமலை (Tiruvannamalai) சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவின கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விநாயகர் சதுர்த்தி விழா - செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை
1 சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த வேண்டாம்
2 சிலைகள் மற்றும் பந்தல்களை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனப் பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த வேண்டாம்.
3.சிலைகளின் மேல்பூச்சு/ அலங்காரத்திற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சிலைகளின் மேல்பூச்சு/ அலங்காரத்திற்கு நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற இரசாயன சாயங்கள் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த
வேண்டாம்.
4 சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜைக்கு பயன்படுத்தவும். சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜைக்கு எவ்வகையிலும் பயன்படுத்த வேண்டாம்.
5. மீண்டும் உபயோகிக்க கூடிய
அலங்கார துணிகளையே
அலங்காரத்திற்கு பயன்படுத்தவும் .வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட மற்றும் ஒருமுறையே உபயோகித்து தூக்கியெறிய கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
6. பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள்
மற்றும் பாத்திரங்களை பயன்படுத்தவும். பண்டிகையின் போது ஒரு முறைபயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள்,கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழல்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
7.பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட வேண்டாம்.
8.அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க வேண்டாம்.
9 எல்.இ.டி. பல்புகள் போன்ற
சுற்றுசூழலுக்கு உகந்த விளக்குகளை
பயன்படுத்தவும். ஃபிலமென்ட் பல்புகளை அலங்கார விளக்குகளாக பயன்படுத்த வேண்டாம்.
10 அலங்கார பொருட்களை பயன்படுத்தி தூக்கி எறியாமல் முடிந்த அளவு சேமித்து மீண்டும் பயன்படுத்தவும் .ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
விநாயகர் சிலை கரைப்பதற்கான இடங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக கண்டறியப்பட்ட
நீர்நிலைகள்
திருவண்ணாமலை
தாமரைக் குளம், சிங்காரப்பேட்டை ஏரி பச்சையம்மன் கோயில் குளம்,
செங்கம்
கோனேரிராயன் குளம், ஐந்து கண் வாராபதி குளம், பூமா செட்டி குளம்,
போளூர் ஏரி, கூர் ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்
விநாயக சதுர்த்தி - 2024 விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவண்ணாமலை ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.