Tiruvannamalai Train: கார்த்திகை தீபம் ஸ்பெஷல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! பக்தர்களுக்கு குட் நியூஸ்!
Karthigai Deepam Special Trains: "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரம், திருநெல்வேலி, விழுப்புரம் பகுதியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது."

Karthigai Deepam Festival: "திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, தாம்பரம், திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது."
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - Tiruvannamalai Karthigai Deepam festival 2025
நினைத்தாலே முக்தி தரும் கோயிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 03 ஆம் தேதி நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு படையெடுக்க உள்ளனர். இதனால் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு டிசம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காலை 9:15 மணிக்கு புறப்படும் சர்க்குலர் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தாம்பரம் மற்றும் எழும்பூர் வழியாக இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரைக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்
விழுப்புரத்தில் இருந்து வரும் நவம்பர் 30, டிசம்பர் 03, 04 மற்றும் டிசம்பர் 05 ஆம் தேதிகளில் காலை 10:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாள் காலை 11:45 மணிக்கு திருவண்ணாமலைக்கு செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து வரும் நவம்பர் 30, டிசம்பர் 3, 4 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் பகல் 12:40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத ரைட் மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து டிசம்பர் 3,டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 5ஆம் தேதிகளில் இரவு 10:40 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 1:45 மணிக்கு வேலூர் கன்டோன்மெண்ட் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் கன்டோன்மெண்ட் பகுதியிலிருந்து டிசம்பர் 4, டிசம்பர் 5 மற்றும் டிசம்பர் 6-ஆம் தேதிகளில் அதிகாலை 2:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 5 மணிக்கு விழுப்புரம் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்
சென்னை தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் காலை 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மதியம் 1:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையிலிருந்து டிசம்பர் மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அன்று இரவு 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி சிறப்பு ரயில்
தென் மாவட்டமான திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் மூன்றாம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை செல்லும், அங்கிருந்து டிசம்பர் 4ஆம் தேதி இரவு 7:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை எட்டு முப்பது மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.





















