Tiruvannamalai Power Shutdown: திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் - எங்கெல்லாம் தெரியுமா.? லிஸ்ட் இதோ.!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தண்டராம்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மூன்றாம் தேதி சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனைஒட்டி தண்டராம்பட்டு, கொலைமஞ்சனூர், நாளால் பள்ளம், அமர்ந்த புத்தூர், தென்முடியனூர், நெல்லிக்குப்பம், எடத்தனூர் ,ராதாபுரம், கீழ் வணக்கம்பாடி, அகரம், தாழனோடை, அல்ல கண்ணூர், கிருஷ்ணாபுரம், சாத்தனூர், டி கே பாளையம், ரோடு பாளையம், பெருங்குளத்தூர், ராயண்டபுரம், இளையாங்கன்னி, கொட்டையூர், அகரம், பள்ளிப்பட்டு, தென் கரும்பலூர், பெருந்துறைப்பட்டு, தானிப்பாடி, நா வேலூர், மலைமஞ்சனூர், வாந்தை, நாராயணகுப்பம், மலையனூர் செக்கடி, ரெட்டியாபாளையம் ஆகிய கிராமங்களில் மூன்றாம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வினோயகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
வெம்பாக்கம் துணை மின் நிறுத்தம்
இதேபோன்று செய்யாறு கோட்டம் வெம்பாக்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் வரும் 3ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, வெம்பாக்கம், கரந்தை, சித்தாத்தூர், காகனம், நமண்டி, வெங்களத்தூர், வெள்ளகுளம், மேலேரி, குத்தனூர், சுமங்கலி, அழிவிடை தாங்கி, கீழ்கஞ்சான் குழி, கோணமடை, திருப்பான மூர் வெங்கட்ராயன் பேட்டை, வயலூர், எடப்பாளையம், சேலேரி, திருப்பனங்காடு, பிரம்மதேசம், நாட்டேரி, பொக்க சமுத்திரம், தென்னம்பட்டு, பனமுகை, புலிவலம், அரியூர், சிறு நாவல்பட்டு, சித்தனகால், வட இலுப்பை, செய்யானூர், மேல் பேட்டை, சியம்பலம்,சீவரம், சுனைப்பட்டு, கல்பட்டு மற்றும் நாயந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மூன்றாம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என செய்யாறு மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.