(Source: Poll of Polls)
பஞ்சமி நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் கொடுங்க - தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
பஞ்சமி நிலத்தை அடமானம் வைக்க தடை இல்லா சான்று கோரி விண்ணப்பித்தும் தடையில்லா சான்று வழங்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணி, வந்தவாசி, போளூர், செங்கம், கீழ்பென்னாத்தூர், தானிப்படி, செய்யார் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்ககோரி. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
தடையில்லா சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
இந்த விசாரணையில் தண்டராம்பட்டு வட்டம் கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் சில மாதங்களாக உள்ளேன். எனக்கு மருத்துவம் பார்க்க பணம் இல்லை, இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். பின்னர் எனக்கு சொந்தமாக தன்னுடைய கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கர் பஞ்சமி நிலத்தை எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த நபருக்கு அடமானம் வைத்து பணம் பெற்று உடல்நிலை பார்த்து கொள்ளலாம் என்று எண்ணி தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையில்லா சான்று வேண்டுமென விண்ணப்பித்துள்ளேன். கடந்த ஆறு மாதங்கள் ஆகியும் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையில்லா சான்று வழங்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, மேலும் என்னுடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது வருகிறது.
பஞ்சமி நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
இதனால் என்னசெய்வது என்று தெரியவில்லை, அதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நானும் என்னுடைய மனைவியும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றோம் என்று கூறினார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி கீழே கொட்டினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க அவர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் சென்று மனுவை அளித்தனர் இதற்கு அவர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கும் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.