மேலும் அறிய

கல்வி கடன் முகாம்: திருவண்ணாமலையில் 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கடனுதவி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கல்விக்கடன் முகாமில் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி கற்றால் மட்டுமே முன்னேற முடியும் என மாவட்ட ஆட்சியர் . பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கல்வி கடன் முகாமில் 400 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

வங்கிக்கடன் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:

கல்விக்கடன் முகாமில் ஒரு தலைமுறை மாற்றம் பெற வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கல்வி கற்றால் மட்டுமே முன்னேற முடியும். கல்வி தான் அழகு. கல்வி தான் செல்வம், கல்வி இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போய் விடக்கூடாது என்பதற்கு  ஒருவர் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தான் கல்வி கற்க முடியவில்லை என்கிற சூழ்நிலை வரக்கூடாது என்ற அடிப்படையில் கல்வி கடன் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி கடன் முகாம்: திருவண்ணாமலையில் 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கடனுதவி

கல்வி கடனை அனைத்து மாணவர்களும் பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் கல்வி கடனை உடனடியாக வழங்க வேண்டும் என்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக பல இடங்களில் கல்வி கடன் அளிக்க மறுக்கின்றனர். எனவே அந்த சிக்கலை நீக்குவதற்காக அனைத்து வங்கிகளும் இணைந்து இந்த சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது. கல்வி கடன் பெறுவதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பதை இந்த முகாம் மூலம் எடுத்துரைப்பார்கள். அதன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து அந்த விதிமுறைகளை பின்பற்றி அனைவருக்கும் கல்வி கடன் வழங்க நாங்கள் இந்த முகாம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் வங்கிகளில் கல்வி கடன் பெறும் மாணவர்கள் அந்த கல்வி கடனை திருப்பி செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் கல்வி கடன் அடுத்த தலைமுறைகளுக்கு வழங்க ஒரு முன் உதாரணமாக இருக்கும் என தெரிவித்தார்.

கல்வி கடன் முகாம்: திருவண்ணாமலையில் 63 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட கடனுதவி
இந்தியன் வங்கி மூலம் 20 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 3 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் 10 மாணவர்களுக்கு ரூ 41 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 7 மாணவர்களுக்கு ரூ19 இலட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலும், பாங்க ஆப் பரோடா சார்பில் 6 மாணவர்களுக்கு ரூ84 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் 4 மாணவர்களுக்கு ரூ 16 இலட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலும்,  சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மூலம் 5 மாணவர்களுக்கு ரூ70 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலும், கனரா வங்கி மூலம் 3 மாணவர்களுக்கு ரூ 6 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 1 மாணவர்களுக்கு ரூ 1 இலட்சம் மதிப்பிலும், ஐடிபிஐ வங்கி மூலம் 1 மாணவர்களுக்கு ரூ 2 இலட்சம் மதிப்பில் கொடுக்கப்பட்டது. கல்வி கடனாக 63 மாணவர்களுக்கு ருபாய் 3 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் மாணவர்களுக்கு கல்வி கடன் உதவியினை வழங்கினார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர்  மு.அருண்பாண்டியன் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Syria War: மீண்டும் ஒரு அதிபர் தப்பியோட்டம் - சிரியா தலைநகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், என்ன தான் நடக்குது?
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
Chennai : சில்மிஷ மாப்பிள்ளை.. பாதியிலேயே நின்ற முதலிரவு, சிக்கிய மோசடி பேர்வழி..
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: ஓயாத வேதனை - தமிழக மீனவர்கள் 8 பேர் கைது, சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: ஆத்தாடி! மூன்றே நாளில் 500 கோடி! இந்திய திரையுலகத்தை ஆளும் புஷ்பா 2!
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?
Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்
Breaking News LIVE: சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - பெரும் பதற்றம்
Vidaamuyarchi:
Vidaamuyarchi: "இந்த பொங்கல் விடாமுயற்சிதான்" டப்பிங்கை முடித்த அஜித்! குஷியில் ரசிகர்கள்!
Embed widget