நாடாளுமன்ற தேர்தல்; திருவண்ணாமலையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வு கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் - 2024 தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பொது தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொது தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தியதேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024- தொடர்பாக எண்.11.திருவண்ணாமலை மற்றும் எண்.12.ஆரணி பாராளுமன்ற தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தின்போது பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் (Rate Chart) இறுதி செய்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் வாக்குச்சாவடியில் 1500க்கு மேல் வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடி மையங்களை பிரித்து 05 துணை வாக்குச்சாவடி மையங்களை (Auxiliary Pollingstation) ஏற்படுத்துதல் வேண்டும்.
மேலும் 27 வாக்குச்சாவடி மையங்களில் பெயர் மாற்றம்116 வாக்குச்சாவடி கட்டிட மாற்றம் மற்றும் 35 வாக்குச்சாவடி இடம் மாற்றம் தொடர்பான முன்மொழிவுகள் இறுதி செய்தல் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் (Vulnerability Polling station) கண்டறிந்தது தொடர்பாக இறுதி அறிக்கை ஆய்வு செய்தல் மற்றும் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் (Control Room) பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சிதலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்றுமுற்பகல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வருமா, வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆர்.மந்தாகினி (திருவண்ணாமலை) மற்றும் பாலசுப்ரமணியன், (ஆரணி) மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கோ.குமரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.