கார்த்திகை தீபம் 2025: திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையங்கள்! வழித்தடங்கள் - பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்-2025: திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் அவற்றின் வழித்தடங்கள்
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு 02.12.2025 முதல் 05.12.2025 வரை போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பக்தர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை WhatsApp உதவி எண். 9487851015-க்கு Hello Message மூலம் தொடர்புகொண்டு Google Map Link-ஐ பெற்று Google Map உதவியுடன் அந்தந்த தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்லலாம்.

மகாதீபத்திற்கு வரக்கூடிய வாடகை பேருந்துகள் உட்பட அனைந்து பேருந்துகளும் மேற்கண்ட நிர்ணயிக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்தவேண்டும். சாலையில் ஓரங்களில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்திச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேற்கூறிய தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலை நகருக்குள் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாய் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் இலவச அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1. வேலூர் ரோடு
வேலூர், திருப்பதி, சித்தூர், KGF, திருத்தணி, ஆற்காடு, ஆரணி உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து போளுர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் தமிழ்நாடு அரசு பேருந்துகள் கிரிவலப் பாதை அருகிலுள்ள அண்ணா நுழைவு வாயில் தற்காலிக பேருத்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
திருப்பதி, சித்தூர், வேலூர் ஆகிய வழித்தடங்களிலிருந்து போளுர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் APSRTC பேருந்துகள் திருவண்ணாமலை வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முகாம்பிகை நகர் மற்றும் AKS நகர் தற்காலிக பேருந்து நிலையங்கள் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்,
2. அவலூர்பேட்டை ரோடு
காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய வழித்தடங்களிலிருந்து அவலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் அவலூர்பேட்டை சாலை கிளியாப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
3. திண்டிவனம் ரோடு
சென்னை, புதுச்சேரி, திண்டிவனம் ஆகிய வழித்தடங்களிலிருந்து செஞ்சி - கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்,
4. வேட்டவலம் ரோடு
விழுப்புரம், புதுச்சேரி ஆகிய வழித்தடங்களிலிருந்து கண்டாச்சிபுரம், வேட்டவலம் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமகை வெளிவட்ட சாலை அருகிலுள்ள ஏந்தல் சர்வேயர் நகர் தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
5. திருக்கோவிலூர் ரோடு
கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலிருந்து உளுந்தூர்பேட்டை திருக்கோலிலூர், வெறைஉயூர் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்
6. மணலூர்பேட்டை ரோடு
தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய வழித்தடங்களிலிருந்து தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள சண்முகா கலை (ம) அறிவியல் கல்லூரி முன்பு உள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
7. தண்டராம்பட்டு ரோடு
அரூர், தரிப்பள்ளி ஆகிய வழித்தடங்களிலிருந்து தானிப்பாடி, தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள மதீனா AC Workshop எதிரேயும், ராஜீ கேஸ் அருகிலுள்ள தற்காலிக பேருந்து நிலையமும் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
8. செங்கம் ரோடு
பெங்களுரு, ஒசூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய வழித்தடங்களிலிருந்து ஊத்தங்கரை, செங்கம், பாச்சல் வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் செங்கம் ரோட்டில் அத்தியந்தனுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள 3 தற்காலிக பேருந்து நிலையங்களான 1) அத்தியந்தல், 2) கபிச்சா கார்டன், 3) சாந்தி ஜீவல்லர்ஸ் நிலம் ஆகிய இடங்களுக்கு வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்
9. காஞ்சி ரோடு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் கடலாடி, புதுப்பாளையம் ஆகிய வழித்தடங்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி வழியாக திருவண்ணாமலை வந்தடையும் பேருந்துகள் ஆடையூர் அருகேயுள்ள டான் பாஸ்கோ சிகரம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையம் வந்துசேரும். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்.
பக்தர்களுக்கு மேலும் விவரங்களோ, உதவியோ தேவைப்படும் பட்சத்தில் வழிப்பாதையில் அமைந்திருக்கும் காவல் உதவி மையங்களை (May I Help You Booth அணுகலாம்.






















