Gram Sabha Meeting: அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும் - தி.மலை ஆட்சியர்
சு.பாப்பம்பாடி ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1 கோடியே 34 இலட்சம் மதிப்பில் 61 பணிகள் எடுத்துயிருக்கிறோம். அதில் 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷப் உடனிருந்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பேசியதாவது:
சிறப்பான முறையில் கிராம சபைக் கூட்டம் சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டம் என்பது கிராமங்களில் உள்ள பொது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து அவர்களின் நிறை, குறைகளை அறிந்து நிறைவேற்றுவது கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவதன் நோக்கமாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் சிறப்பான முறையில் அந்தந்த ஊராட்சிமன்றத் தலைவர்களால் கொடியேற்றப்பட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-2022 2022-2023 செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இந்த ஊராட்சியின் மக்கள் தொகையின் ஆயிரத்து 564 மொத்த வீடுகளின் எண்ணிக்கை 363 ஆகும். வரி செலுத்துவதன் கடை வாடகை 15 வது நிதிக்குழு மூலம் கிராம பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்குவதன் வாயிலாக வருவாய் வருகின்றது. மேலும் அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலமாகவும் வருவாய் வருகின்றது. அரசு சில திட்டங்களை அறிவிக்கும். அதில் பள்ளி கட்டடங்கள் கட்ட திட்டங்கள், பள்ளி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் மூலம் சமையலறை அமைத்தல், பள்ளியின் கழிவறை அமைத்தல் என அறிவிக்கப்பட்டுயிருந்தன. தமிழக அரசு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து குறிப்பாக நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராமங்கள் உள்ளன.
அதில் 2021 -22 ஆண்டில் 169 கிராமங்களையும் 2022 -23 ஆண்டில் 75 கிராமங்களையும் 2023 -24 ஆண்டில் 75 கிராமங்களையும் தேர்ந்தெடுத்து 2026 அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம். சு.பாப்பம்பாடி ஊராட்சி பி 2022 -23 ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கி அடிப்படை வசதிகளான சாலை அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், மேல்நீர் தொட்டி அமைத்தல் கால்வாய் அமைத்தல் என அடிப்படை வசதிகளை செய்து முடிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ரூ 1 கோடியே 34 இலட்சம் மதிப்பில் 61 பணிகள் எடுத்துயிருக்கிறோம். அதில் 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கிராமத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்து தேவையான திட்டங்களும் அடிப்படை வசதிகள் குறித்து விவாதிப்பதே கிராம சபையின் நோக்கம். மேலும் 2021 -22 ஆண்டில் ரூபாய் 4 இலட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பள்ளி சுற்றுசுவர் கட்ட நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதற்கான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். திடகழிவு மேலாண்மைக்காக ரூபாய் 85 ஆயிரம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
2022 -23 ஆண்டில் பள்ளி கழிவறை, கால்வாய் அமைத்தல், நீர்பாசன வசதிக்காக அமைத்தல் மற்றும் 10 ஆயிரம் லிட்டரில் மேல்நீர் தொட்டி அமைக்க ரூபாய் 6 இலட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் கட்டி முடிக்க வேண்டும். 2023-24 ஆண்டுக்கான பணிகளில் அமைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுவதால் பள்ளியில் சமையலறை கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. பக்ககால்வாய் கட்டுவதன் நோக்கத்தை எடுத்துரைத்து பக்க கால்வாய் கட்டுவதை விட தனிநபர் உறிஞ்சு குழாய் கட்டுவதே மேல். வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு பெறாத குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்று தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும். சு.பாப்பம்பாடி கிராமத்தில் முதலாவது அனைத்து வீடுகளில் குடிநீர் வசதி உள்ளதா?. 2வது அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டி இந்த கிராமம் தன்னிறைவு பெற்ற கிராமமாக இருக்க வேண்டும். 3வது சாலை வசதிகள் சரியாக உள்ளதா?
கிராமப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டத்தில் பிஎம்ஒய்ஏ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில் கிராம சபை கூட்டத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டது. அந்த பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரி பார்த்து அந்த திட்டத்தின் மூலம் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாக்காளர்களின் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் 3 குழுக்களுக்கு ரூபாய் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலையும்1 மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் வழங்கினார்.