மேலும் அறிய

Annapoorani Arasu Amma: ”அன்னப்பூரணி அரசு அம்மாவுக்கு 3வது மேரேஜ்” தெய்வீக திருக்கல்யாணம் என பக்தர்கள் பரவசம்..!

Annapoorani Arasu Amma Marriage : " பிரபல பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் "

Annapoorani Arasu Amma Marriage: செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. தன்னை அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு அவதாரம் என கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். கடந்த, 2014ல், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி , தனது கணவர் மற்றும், 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, அவரது காதலனான அரசு என்பவருடன் ஈரோட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். 

அன்னபூரணி அரசு அம்மா 

இந்நிலையில், அரசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அன்னபூரணி தனது காதலனான, அரசு உருவ சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்பு ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்து, தன்னை கடவுள் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், இவை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார்.

ஆன்மீக சொற்பொழிவு

இந்நிலையில், ஆன்மீக பூமியான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போட்டார். அப்போது அங்கு வந்த சில பெண் பக்தர்கள் அவருக்கு கற்பூர தீபம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர். மேலும், சில ஆண்கள், பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினர். அப்போது தெரிவித்த அவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. அதற்காக என்னிடம் உள்ள பணத்திற்கு இங்குதான் இடம் வாங்க முடிந்தது. இங்கு ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக பணியை தொடர உள்ளேன். நான் அருள்வாக்கு சொல்வதில்லை, ஆன்மீகத்தைத்தான் சொல்லிகொடுத்து வருகிறேன். எனது இரண்டாவது கணவர் அரசு சிலை இங்கு ஆசிரமத்தில்தான் உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே இல்லாமல் ஆன்மீகம் இல்லை. என்னை அழிக்க யாராலும் முடியாது என்றும் கூறியுள்ளார்.

சாமியார் இல்லை கடவுள்

இந்நிலையில் தான் சாமியார் இல்லை கடவுள் என்று அவருக்கு தானே கோயிலை கட்ட முடிவு செய்து கோயில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி கோயிலையும் கட்டி முடித்துள்ளார். கோயில் என்றாலே கோவிலுக்குள் கடவுளின் திருவுரு சிலை இருக்கும். ஆனால் அன்னபூரணி அரசு அம்மா கட்டிய கோயிலில் தன்னுடைய உருவத்தை சிலையாக செய்து அங்கு கடவுள் சிலை போன்று அமைத்துள்ளார். மேலும் கோவிலின் கும்பாபிஷேத்தின்போது அம்மன் வேடத்தில் அவதரித்த அன்னபூரணி அம்மா அரசுவிற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாத பூஜை செய்து காலினை தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். அப்போதும் அசராமல் நின்ற, அன்னபூரணியிடம் பலர் ஆசிபெற்றனர்.

3 வது திருமணம் 

தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் தினமும் உபதேசங்களை வழங்கி வருகிறார் . அதேபோன்று சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தனது பக்தர்களுக்கு அருள் ஆசி கூறி வருகிறார். தொடர்ந்து சாமியாக வலம் வரும் அன்னபூரணி அரசு அம்மா, அடுத்த திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

நடந்து முடிந்த திருமணம் 

அன்னபூரணி அரசு அம்மா அறிவித்தபடி இன்று ரோகித்தை திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் இந்த திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தெய்வீக திருமணம் என அறிவிக்கப்பட்டு இந்த திருமணம் நடந்தேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து வருங்காலத்தில் அவர்களில் இருவரும் இணைந்து,  பக்தர்களுக்கு அருள் ஆசிக் கூற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், அன்னப்பூரணி அம்மாவின் பக்தர்கள் பரவசமடைந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Group 4 Counselling: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு எப்படி நடைபெறும்?- வெளியான முக்கியத் தகவல்!
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
TAHDCO GBS Scheme: பசுமை வணிக திட்டம் - ரூ.27 லட்சம் வரை கடன், வட்டி வெறும் 4% மட்டுமே - பயனாளர்களுக்கான தகுதிகள்?
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
Rishabh Pant Salary : ஏலத்தில் 27 கோடி! ஆனால் கைக்கு இவ்வளவு தான் வருமா? பண்ட்டின் முழு சம்பள விவரம்
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”பள்ளி மாணவர்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய்” வந்தது அதிரடி அறிவிப்பு..!
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Embed widget