சொத்து தகராறில் அண்ணனை கம்பியால் அடித்து கொன்ற தம்பி கைது
தம்பி கதிரவன் குடும்பச் சொத்தை பிரித்து தர மாட்டாயா எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காத கதிரவன் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து சிவகுமாரின் தலையில் தாக்கியுள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோட்டில் சொத்து தகறாறில் அண்ணனை கம்பியால் அடித்து கொன்ற தம்பியை கைது செய்த இரணியல் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (41) கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கும் இவரது தம்பி கதிரவன் என்பவருக்கும் குடும்ப வீட்டின் சொத்தை பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி சிவகுமார் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியில் வரும்போது அங்கு வந்த அவரது தம்பி கதிரவன் குடும்பச் சொத்தை பிரித்து தர மாட்டாயா எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத கதிரவன் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து சிவகுமாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தை ரத்ததில் தோய வைத்த மொழிப்போரும் அதன் தியாகிகளின் வரலாறும்...!
இதில் சிவகுமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை மீட்டு சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சிவகுமார் மனைவி வனிதா இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பூங்காக்களை அமைப்பது மற்றும் முறைப்படுத்துவது தொடர்பாக ஏதேனும் விதிகள் உள்ளதா ? - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- குடியரசு தினத்தன்று ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தேசியக்கொடி ஏற்றக்கூடாது - நாராயணசாமி போர்க்கொடி
புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கதிரவனை கைது செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கதிரவனை இரணியல் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொதுத்துறை நிறுவனமான ஒ.என்.ஜி.சி நுழைவு வாயில் முன்பு கிராம மக்கள் போராட்டம்