Durai Vaiko : அண்ணாமலையோ, ஆளுநரோ, பிரதமரோ.. எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும்- துரை வைகோ
மக்களுடைய எதிர்ப்பு கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள யூனியன் கிளப்பில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ ஆலோசனை மேற்கொண்டார். தீப்பெட்டி தொழிலுக்கு எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் உதவிகள் குறித்த்தும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்தார்.
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தயராக இருப்பதாகவும், தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பது மட்டுமின்றி, மத்தியரசு மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் இதில் நேஷனல் தீப்பெட்டி சிறு உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், சாத்தூர் பகுதி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பாரபட்சமில்லாமல் தமிழக காவல்துறையினர் செய்திருந்தனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு உள்ளட்ட 11 தீர்மானங்களை ஆளுநருக்கு அனுப்பியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது ஜனநாயக படுகொலை,இச்செயல் தமிழக மக்களுக்கான விரோதப் போக்கினை ஆளுநர் கையாளுகிறார்.ஆளுநர் தமிழக ஆளுநராக செயல்பட வேண்டும் பாஜக ஆளுநராக செயல்படக்கூடாது அதுதான் மதிமுகவின் கருத்து என்றும், மக்களுடைய எதிர்ப்பு கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம், வன்முறை கூடாது என்பதுதான் மதிமுக கருத்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட பட்ட விவகாரம் தமிழக மக்களின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கிறேன்.
இலங்கையில் உள்ள அரசு போல் இங்கு மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்தால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் மோடி ஆக இருந்தாலும் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும், திராவிடம் என்பது சமத்துவம், சமூக நீதி என்ற வாழ்வியல் முறை தான் திராவிடம், அண்ணாமலை நானும் ஒரு திராவிடன் என்று கூறியது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு அது தரைகுறைவாக கொச்சைப்படுத்திய தாகும் வரம்பு மீறிய இருக்கக்கூடாது பாக்யராஜ் கூறிய கருத்தை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன்.
கோடை காலங்களில் மின் தேவை என்பது அதிகமாக தேவைப்படுகிறது அது காலங்காலமாக நடைபெற்றுவரும் செயல். அதில் சவாலான பிரச்சனைகளும் உள்ளது நேற்று அமைச்சர் இது சம்பந்தமாக கூறிய விளக்கம் அளித்துள்ளார். அதன் காரணமாக கூட இருக்கலாம், வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு வராது என்பதுதான் என் நிலைப்பாடு. அதற்கான உற்பத்தியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே மின் தட்டுப்பாடு வராது என்பது தனது நம்பிக்கை” என்றார்.