மேலும் அறிய

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது.

தூத்துக்குடியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த போதிலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம், மன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பருவமழை சரியாக பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இருப்பினும் தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நிலைமை மிகவும் மோசமாக இருந்த போதிலும், மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீரை வழங்கி வருகிறோம். குடிநீர் பிரச்னை இன்னமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே, மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதேபோல் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை ரூ.25.57 கோடியில் சீரமைப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் உள்ளிட்ட மொத்தம் 14 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேயர் பதிலளித்தார். அதிமுக கொறடா மந்திரமூர்த்தி பேசும்போது, காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, பண்ணை பசுமை காய்கறி அங்காடி அல்லது உழவர் சந்தை மூலம் 60 வார்டுகளிலும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பனிமய மாதா பேராலய தங்கத் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய உணவுக் கழக குடோனில் இருந்து வெளியாகும் வண்டுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தண்ணீர் பிரச்னை இன்னும் முடியலை; சிக்கனமாக பயன்படுத்துங்க - தூத்துக்குடி மேயர் வேண்டுகோள்

இதற்கு பதிலளித்து மேயர் பேசும்போது, பனிமய மாதா பேராலய திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன. பேராலய பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9 இடங்களில் குடிநீர் தொட்டி, 150 தூய்மை பணியாளர்கள், நகரும் கழிப்பறை வசதி, அந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளை சுத்தமாக பரமாரிக்க கூடுதல் பணியாளர்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய உணவுக் கழகம் மத்திய அரசு நிறுவனமாகும். அதில் இருந்து வண்டுகள் வெளியேறி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Embed widget