மேலும் அறிய

ஆகாய தாமரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்; 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு - கனிமொழி எம்.பி தகவல்

குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை தண்டுகள் மற்றும் இலைகளை சேகரித்து கைவினைப்பொருட்கள் மற்றும் உபபொருட்கள் செய்வதால், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற திருமண மண்டபத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் இசாம் அறக்கட்டளை ஒருங்கிணைந்து நடத்தும் தூத்துக்குடி ஆகாயத்தாமரை குழுமத்திற்கான முதல் தொகுப்பு பயிற்சி முகாமினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்  கனிமொழி , மாவட்ட ஆட்சித் தலைவர்செந்தில்ராஜ், முன்னிலையில்  தொடங்கி வைத்தார்.

ஆகாய தாமரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்; 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு -  கனிமொழி எம்.பி தகவல்

இந்தப் பயிற்சி முகாமில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசும்போது, "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முக்கியத்துவத்தினைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவுகளையும் தொடர்ந்து நல்கி வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. அந்தவகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை வாயிலாக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒரு கோடிக்கு குறைவான முதலீட்டில் இயங்கும் குழுமங்களின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஆகாய தாமரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்; 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு -  கனிமொழி எம்.பி தகவல்

குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், உதவிபெறுவதற்கு குறைந்தபட்சம் 20 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். குறுங்குழும மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு குழுமம் உள்கட்டமைப்பு வசதி, உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல், தரக்கட்டுப்பாடு பரிசோதனைக் கூடம் மற்றும் பொதுவான வசதி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சமாக 7.5 கோடி வரையிலான உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.

ஆகாய தாமரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்; 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு -  கனிமொழி எம்.பி தகவல்

இத்திட்டத்தின் கீழ் ஒரு குழுமம் கொண்டு வரப்படும் போது ஏற்கனவே உள்ள திட்டங்களின் கீழ் கிடைக்கும் வளங்களும் அதே குழுமத்தின் கீழ் கொண்டு வரப்படும். உதாரணமாக பொதுவான வசதி மையங்களுக்கான உதவியுடன் தனித்தனி அலகுகளின் இயந்திர தளவாடங்கள் மூலதன மானிய திட்டத்தாலும் , புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும். தேவைப்படின் பிற துறைகளின் கூட்டாண்மையுடனும் குறுங்குழும மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆகாய தாமரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்; 600 பெண்களுக்கு வேலைவாய்ப்பு -  கனிமொழி எம்.பி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றியுள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரை தண்டுகள் மற்றும் இலைகளை சேகரித்து கைவினைப்பொருட்கள் மற்றும் உபபொருட்கள் செய்வதால், நீர்நிலைகள், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகிறது. இங்கு உள்ள மகளிர்கள் ஆகாயத்தாமரையிலிருந்து கூடை, கேன் பேக், மலர் ஜாடி, மிதியடி, பானை, குப்பைத்தொட்டி, கல்வி உபகரணங்கள் வைக்கும் பெட்டி, மளிகைப்பொருட்கள் வைக்கும் அஞ்சரைப்பொட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான கைவினைப்பொருட்கள் தயாரித்து வருகிறார்கள். 

மேலும், உள்ளுர் மகளிர்களின் திறன்களை மேம்படுத்தி நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 25 உறுப்பினர்களுடன் தூத்துக்குடி ஆகாயத்தாமரை குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது அமைய இருக்கும் ஆகாயத்தாமரை உற்பத்தி அலகிலிருந்து முதல் கட்டமாக வெளிநாடுகளில் தற்போது அதிக தேவைப்படும் வட்ட வடிவிலான 2 இலட்சம் மேசை விரிப்புகள் முதலாமாண்டில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனை உற்பத்தி செய்ய சுமார் 600 பணியாளர்கள் தேவைப்படுவதால் மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் இசாப் அறக்கட்டளை இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆர்வமுள்ள 600 மகளிருக்கு ஆகாயத்தாமரையிலிருந்து ஏற்றுமதி தரத்திலான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி நடத்தி உற்பத்தி அலகில் பணியாளராக நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மகளிர்கள் ஆர்வத்தோடு தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்டு பல்வேறு தரமான கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு மகளிர்களும் தங்களுக்குள்ளே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிக் கொண்டு, உலகத்தரத்திலான கைவினைப் பொருட்களை தயாரிக்க வேண்டும். 

நீங்கள் ஆகாயத்தாமரையிலிருந்து தயாரிக்கும் கைவினைப்பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ள வணிக நிறுவனங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, தன்னம்பிக்கையோடு விடாமுயிற்சியோடு தொடர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி பெற்று, உலகத்தரத்திலான பல்வேறு கைவினைப்பொருட்கள் தயார் செய்து, தங்களது குடும்பத்திற்கு ஓர் முன்உதாரணமாக செயல்பட வேண்டும்" என்றார்.

அதனைத்தொடர்ந்து, ஆகாயத்தாமரை தண்டுகள் மற்றும் இலைகளைக்கொண்டு கைவினைப் பொருட்கள் மற்றும் உப பொருட்களை பார்வையிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
Watch Video: ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ பெண்களிடம் எகிறிய பா.ம.க. எம்.எல்.ஏ - வீடியோவை பாருங்க
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
Embed widget