மேலும் அறிய

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

ஊமைத்துரை 7 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி குறைந்த நாட்களில் பாஞ்சாலங்குறிச்சியில் புதிய கோட்டையை நிர்மாணித்தார்.

வீரத்தால் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர், வீரபாண்டிய கட்டபொம்மன். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்தவர். பாளையம் என்பது குறுநில அரசை குறிக்கும் சொல் ஆகும். முன்பு பாஞ்சாலங்குறிச்சி ஊர் இருந்த பகுதி வெறும் காடாக இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை கட்டபொம்மு அந்த காட்டு பகுதிக்கு சேனைகளுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது ஒரு முயலை நாய் துரத்தி வந்ததை பார்த்தார். ஒரு இடத்தில் வந்த போது திடீர் என்று அந்த முயலுக்கு வீரம் வந்து, நாயை துரத்திச் செல்ல ஆரம்பித்ததாம். இதைக்கண்டு அதிசயப்பட்ட கட்டபொம்மு உடனே வீரம் நிறைந்த அந்த இடத்தில் கோட்டையைக் கட்டி, பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரிட்டு ஊரையும் நிர்மாணித்தார்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

கட்டபொம்முவுக்கு வீரபாண்டியன், ஊமைத்துரை, துரைசிங்கம் என்ற மூன்று மகன்கள். வீரபாண்டியன் 1760-ம் ஆண்டு பிறந்தார். பெயருக்கு ஏற்பவே மாவீரனாக விளங்கினார். தந்தையின் பெயரையும் சேர்த்து அவருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பெயர் வந்தது. தன்னுடைய 30-வது வயதில் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக வீரபாண்டியன் முடி சூடினார். அதன் பின்னர் மக்களுக்கு நல்லாட்சி நடத்தினார்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

பாஞ்சாலகுறிச்சிக்கு உட்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போன்ற பகுதிகள் வரை பரந்து விரிந்திருந்ததால் கிழக்கிந்திய கம்பெனியினர் 1797 ஆம் ஆண்டு வரிவசூலிக்க முனைப்பு காட்ட அதனை எதிர்த்ததால் ஆங்கிலேய தளபதி ஆலன்துரை என்பவர் பெரும்படையுடன் கட்டபொம்மனுக்கு எதிராக போர் தொடுத்தார். இந்தபோரில் ஆலன்துரை படையினர் தோல்வி கண்டனர். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜாக்சன்துரை வீரபாண்டிய கட்டபொம்மனை சந்திக்க அழைப்புவிடுத்தும் கட்டபொம்மன் சந்திக்காமல் அலைக்கழித்தார். தொடர்ந்து கட்டபொம்மன் இறுதியில் இராமநாதபுரத்தில் சந்தித்தார். இதனையடுத்து கட்டபொம்மனை கைது செய்ய ஆங்கிலேயர் ஆட்சி நினைக்க அங்கிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

இதனையடுத்து ஜாக்சன்துரை உத்தரவின் பேரில் பானர்மென் என்பவரது தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை செப்டம்பர் 5 1799 ஆம் ஆண்டு முற்றுகையிட்டு போரில் ஈடுப்பட்டனர். இதில் அதிக உயிரிழப்புகள் இருதரப்பில் இருந்தபோதும் செப்டம்பர் 9 1799 ஆம் ஆண்டு கோட்டையை விட்டு தப்பிச்சென்றார் வீரபாண்டிய கட்டபொம்மன். இதனை தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனின் கோட்டையை கைப்பற்றி ஆங்கிலேயர்கள் அதனை தகர்த்தனர்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

பீரங்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களைக் கொண்டு கோட்டையை தாக்கினர். அந்த வீரக்கோட்டை சேதம் அடைந்து இடியும் தருவாயை எட்டியது. ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தம்பிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின்னர் பல்வேறு இடங்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அக்டோபர் 1, 1799-ல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கோழைத்தனமாக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். இதனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களிடம் பிடிபட்டார்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

இந்த போலியான விசாரணை முடிவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவின்படி, அக்டோபர் 16-ம் தேதி, 1799-ம் ஆண்டில் கயத்தாறு ஒரு புளியமரத்தில் மக்கள் முன்னிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மரணத்தை தழுவினார். வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்து பாஞ்சாலங்குறிச்சியிலேயே ஆங்கிலேயர்கள் தூக்கிட்டு இருக்க முடியும், ஆனால் பிற பாளையத்தார்களை அச்சத்தில் ஏற்படுத்தவும் அவர்களுக்கு ஆங்கிலேயர்களை எதிர்த்தால் கட்டபொம்மனின் நிலைதான் உங்களுக்கு என்பதன் அடிப்படையிலேயே பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கயத்தாறில் புளியமரத்தில் தூக்கிலிட்டனர் கும்பினியார்கள்.

ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட தினம் இன்று! வரலாறு தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget