மேலும் அறிய

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும் வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

பெருமாள்புரம் சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்களை ஆபசமாக தனது செல்போனில் படமெடுத்த நபரால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று இரவு காலனி பகுதியில் மர்ம நபர் ஒருவர் தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் அப்பெண்ணை தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராமல் கவனித்த அந்த பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அதற்குள் சூதாரித்து கொண்ட அந்த மர்ம நபர் வீட்டின் அருகே சென்று ஒளிந்து இருந்து உள்ளார். 

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும் வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

அப்போது அந்த பெண் நடந்ததை கூறியதை தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அந்த நபரை வீட்டை சுற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகிலுள்ள பூங்காவில் மர்ம நபர் ஒளிந்து இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அவரை பிடித்து பெருமாள் புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பாளையங்கோட்டை அருகே ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை ஆய்வு செய்ததில் அதில் பல நாட்கள் இது போன்று பெண்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை வீடியோ எடுக்கும் மர்மநபர்; செல்போன் முழுவதும் வீடியோ - போலீஸ் அதிர்ச்சி..!

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  காவல்துறையினர்  அதிலுள்ள காட்சிகளை வைத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரிலும், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்து அதை வெளியிடுவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பெருமாள்புரம் பகுதியில் இப்படி ஒருவர் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நபர் வீடியோ எடுப்பதற்காக மட்டும் சென்றாரா அல்லது வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget