மேலும் அறிய

Crime: இரட்டை கொலை வழக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 5 பேருக்கு குண்டாஸ் நெல்லை மாவட்ட க்ரைம் செய்தி இதோ..!

”சிராஜ்தீன் மற்றும் நாகூர்மீரான் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 1000/- அபராதமும் விதித்து நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு”

 செய்தி 1

நெல்லை மாவட்டம் மானூர் அருகே குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (39) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிராஜ்தீன் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 22.07.2010 அன்று குறிச்சிகுளம் குளக்கரை அருகே சுப்பிரமணியனை சிராஜ்தீன் மற்றும் அவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த லத்தீப், நாகூர் மீரான்(42), ஜெயபிரியா ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி உள்ளனர். அதனை தடுக்க சென்ற சுப்பிரமணியனின் தாயான கோமதியம்மாளை கம்பால் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த  நிலையில் இதுகுறித்து மானூர் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இதில் லத்தீப் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். பின் ஜெயபிரியா என்பவர் நீதிமன்றம் மூலமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சூழலில் இவ்வழக்கு விசாரணையானது நெல்லை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 04.09.2024 இன்று  இவ்வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி பத்மநாபன் கொலை வழக்கில் தொடர்புடைய சிராஜ்தீன் மற்றும் நாகூர்மீரான் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மானூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.

செய்தி-2:

 நெல்லை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரி, ரெட்டை விநாயகர் கோவில்  தெருவை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து ராஜா (20) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்  வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும்,

அதேபோல், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொள்ளை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளம், வீரமணி நாயகபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் ஆனந்தராஜ் (45) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் கொள்ளை மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும், 

வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வள்ளியூர், ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் அஜித்குமார்(24), ஆ.திருமலாபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மரியகன் என்பவரின் மகன் ராமகிருஷ்ணன் (34) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில்  அடைக்கப்பட்டிந்தனர். இவர்கள் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும்,

பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட பணகுடி, தண்டையார்குளம், சுபாஷ் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரின் மகன் முருகன் (35) என்பவர் கைது செய்யப்பட்டு இவரும் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
Embed widget