நெல்லை, தென்காசியில் நாளை எங்கெல்லாம் மின் தடை: எங்கெல்லாம் ரத்து? இப்பவே உஷாராகிக்கோங்க..!
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், திருநெல்வேலி கிராமப்புற கோட்டம், வள்ளியூர் கோட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஆகிய ஒரு சில இடங்களில் நாளை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசியில் நாளை ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் தடை இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் மின் தடை அறிவிப்பானது ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் திரு. G.குத்தாலிங்கம் அவர்களின் செய்தி குறிப்பு.
மூலைக்கரைப்பட்டி உபமின் நிலையத்தில் 17/08/2024 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே கீழ்கண்ட ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. குறிப்பாக மூலைக்கரைப்பட்டி, பருத்திப்பாடு, புதுக்குறிச்சி, மருதகுளம், கோவைகுளம், முனைஞ்சிப்பட்டி, தாமரைசெல்வி, காடான்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்பொறியாளர் நகர்ப்புற கோட்டம் திருநெல்வேலி திரு. செ. முருகன் அவர்களின் செய்தி குறிப்பு
110/33-11KV பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 17.08 .2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். வி எம் சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகர், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹமத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், கான்சாபுரம், திம்மராஜபுரம், திருமலை கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், அரியகுளம், மேல குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் திரு.பா.கற்பக விநாயக சுந்தரம் அவர்களின்
செய்தி குறிப்பு
110/11KV விஸ்வநாத பேரி துணைமின் நிலையங்களில் வருகின்ற 17.08.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் கீழ்க்கண்ட இடங்களில் இருக்காது. காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் கொக்கிரகுளம், சமாதானபுரம்,
திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் வன்னிக்கோனந்தல், கங்கைகொண்டான், மூன்றடைப்பு, கரந்தநேரி, ரஸ்தா, பரப்பாடி,
வள்ளியூர் கோட்டத்தில் பணகுடி, நவலடி, சங்கனாங்குளம், கூடன்குளம், வள்ளியூர், சங்கரன்கோவில் கோட்டத்தில் கலிங்கப்பட்டி , திருவேங்கடம் , மலையன்குளம், நக்கலம் முத்தன்பட்டி,
கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மேலக்கல்லூர், ஆகிய உப மின் நிலையங்களில் நாளை 17.08.2024 நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் தேதி தங்களுக்கு முன் தேதியிட்டு தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.