மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கன்னியாகுமரியில் குளத்தில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
மூத்த குழந்தையான மூன்றரை வயதுடைய ரோஷன் உடன் தந்தை ரமேஷ் தக்கலையில் தனது தாயார் தீபாசிங்குடன் வசித்து வந்தார்
![கன்னியாகுமரியில் குளத்தில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு Three-and-a-half-year-old child dies after falling into pond in Kanyakumari கன்னியாகுமரியில் குளத்தில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/63c778132180e7c2642af84fbd47a963_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயிரிழந்த குழந்தை ரோஷன்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கிரானைட் ஆலை உள்ளது அதன் வளாகத்தில் அமைத்துள்ள உரிமையாளரின் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த லாலு சிங் என்பவரது மனைவி தீபாசிங் அவரது குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வந்துள்ளார். இவரது மகனான ரமேஷ் என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இதில் இரண்டு குழந்தைகளுடன் இவரது மனைவி நேபாளத்தில் வசித்து வருகினார்.
![கன்னியாகுமரியில் குளத்தில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/d6f5b607a3de4aff6e63498c6036d0a2_original.jpg)
இதில் மூத்த குழந்தையான மூன்றரை வயதுடைய ரோஷன் என்பவருடன் ரமேஷ் தக்கலையில் தனது தாயார் தீபாசிங்குடன் வசித்து வந்த நிலையில் குழந்தை ரோஷன் அந்த தனியார் கிரானைட் ஆலை வளாக வீட்டின் பின்புறம் அமைந்துள்ள தோட்டத்து குளத்தின் கரையில் விளையாடி கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை ரோஷன் குளத்தில் தவறி விழுந்தார் இது குறித்து பெற்றோர் கொடுத்த தகவலன் அடிப்படையில் தக்கலை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வத்து குளத்தில் தேடியதில் உயிரிழந்த நிலையில் குழந்தையை மீட்டனர்.
![கன்னியாகுமரியில் குளத்தில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/09/be86bffaabb3c9cf859e2497f0315719_original.jpg)
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை காவல்துறையினர் குழந்தை ரோஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் தவறி விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion