மேலும் அறிய

'எங்க ஊரில் ரயில் நிக்கவில்லை என்றால் ஆதாரும் வேண்டாம் வாக்காளர் அட்டையும் வேண்டாம் - அதிரடி முடிவில் கடம்பூர் மக்கள்

அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி - கடம்பூரில் 2வது நாளாக கடையடைப்பு போராட்டம் - ஆதார் வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பொதுமக்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூரில் ரயில்வே நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி இரண்டாவது நாளாக முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக 75 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆதார் வாக்காளர் மற்றும் குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எங்க ஊரில் ரயில் நிக்கவில்லை என்றால் ஆதாரும் வேண்டாம் வாக்காளர் அட்டையும் வேண்டாம் - அதிரடி முடிவில் கடம்பூர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கடம்பூர்.. நெல்லை அல்வா, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி, கோவில்பட்டி கடலை மிட்டாய் இன்று பெயர் இருப்பது போல கடம்பூர் என்றாலே போளிக்கு புகழ் வாய்ந்த ஊர். அது மட்டுமல்ல உணவுப் பொருட்கள் வணிகம் மற்றும் விவசாயி நிறைந்த பகுதி.. கடம்பூர் அருகே கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி என பெரிய நகரங்கள் இருந்தாலும், கடம்பூரை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடம்பூர் பேரூராட்சி தான் முக்கிய நகரமாக மட்டுமின்றி வணிக மையமாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்னை ,பெங்களூர் மும்பை, என தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் வணிகம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாள்தோறும் மதுரைக்கு ரயில் மூலமாக கடம்பூரில் இருந்து ஏராளமான வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.

எங்க ஊரில் ரயில் நிக்கவில்லை என்றால் ஆதாரும் வேண்டாம் வாக்காளர் அட்டையும் வேண்டாம் - அதிரடி முடிவில் கடம்பூர் மக்கள்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரம் என்பதால் கடம்பூர் ரயில்வே நிலையம் மிக முக்கிய ரயில்வே நிலையமாக உள்ளது. மதுரை நெல்லை இடையே கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக கடம்பூரில் நடந்த பிரதான ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன் இயக்கப்பட்டு வந்த பல ரெயில்கள் கொரோனாவிற்கு பின்னர் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எங்க ஊரில் ரயில் நிக்கவில்லை என்றால் ஆதாரும் வேண்டாம் வாக்காளர் அட்டையும் வேண்டாம் - அதிரடி முடிவில் கடம்பூர் மக்கள்

நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி ரெயில்வே நிலையத்தில் முன் பதிவு செய்து தான் அங்கிருந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மற்ற ரெயில் நிலையங்களில் இறங்கி வேறு வாகனங்களில் பயணித்து ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கடம்பூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வில்லை என்பதால் உள்ளுர் வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அனைத்து ரயில்களும் கடம்பூர் ரெயில்வே நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேற்று அனைத்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

எங்க ஊரில் ரயில் நிக்கவில்லை என்றால் ஆதாரும் வேண்டாம் வாக்காளர் அட்டையும் வேண்டாம் - அதிரடி முடிவில் கடம்பூர் மக்கள்

உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர். அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக 75 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடம்பூரில் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் கடம்பூர் வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகிறோம், ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்பதால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த அதிகாரியும் தங்களது கோரிக்கைகளை குறித்து பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை, தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,, குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க போவதாகவும், தொடர் போராட்டத்திலும் ஈடுபட இருப்பதாகவும் அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget