மேலும் அறிய
தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?
’’திட்டம் நிறைவேற்றப்படும் போது முதலிலேயே இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு சாலை அமைத்து இருந்தால் திட்ட செலவு குறைந்து இருக்கும், இப்போது அரசுக்கு மேலும் செலவு ஏற்படும் என மக்கள் புகார்’’
![தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்? Thoothukudi: The Smart City project is in question due to lack of coordination among government departments தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/22/214ba0de3c48197c3e1af3532625ec7d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பண்டுக்கரை சாலை
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் பிரதான சாலைய உள்ள பாளையங்கோட்டை சாலை தூத்துக்குடி 3 ஆவது மைலில் துவங்கி திரேஸ்புரம் வரை செல்கிறது. மேலும் இச்சாலை அண்ணா சிலையில் இருந்து சத்திரம் பேருந்து நிறுத்தம் முன்வரை தமிழ் சாலையாகவும் அதனை தொடர்ந்து பழைய மாநகராட்சி வரை வ.உ.சி சாலையாகவும் அதனை தொடர்ந்து கிரேட் காட்டன் சாலையாகவும் 6 கிலோ மீட்டர் நீளம்வரை நீள்கிறது. இச்சாலை அண்ணா சிலையில் இருந்து சார் ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு (மேற்கில் இருந்து கிழக்கு வரை) வழிப்பாதையாக உள்ளது.
![தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/a4f80c2947128a315ef2f9468626feb9_original.jpg)
அடுத்தப்படியாக விக்டோரியா சாலையும் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. (கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி) இந்த சாலை கடற்கரை சாலையில் இருந்து மேற்கு நோக்கி அண்ணா சிலை வரை செல்கிறது. ஒட்டுமொத்த நகரமும் இரண்டு பிராதான சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது இதனால் மாநகர் பகுதிக்குள் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனை தீர்க்கும் வகையில் 3 ஆவது மைல் பகுதியில் இருந்து பக்கிள் ஓடை வழியாக செல்லும் பண்டுகரை பகுதியை செம்மைப்படுத்தி சாலை உள்கட்டமைப்பை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
![தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/f037549acdc7f47c9c0ec14eafd03f53_original.jpg)
இந்த சாலை அமையும் போது போக்குவரத்துக்கு ஓரளவு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு மாறாக இந்த சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை அகற்றாமல் அமைக்கப்பட்டு வருவதால் சாலை மிகவும் குறுகலாகவும் வளைந்தும் நெளிந்தும் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.
![தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/ab418d460cc1c45d988181d389ec8dce_original.jpg)
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் கேட்டபோது, மின் வழித்தடம் அனைத்தும் கீழ் வழித்தடமாக கொண்டு செல்லும் வகையில் அதன் அருகிலேயே அண்டர்கிரவுண்டு அமைக்கப்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் மின்வாரியத்திற்கு பணம் செலுத்தியவுடன் மின்கம்பங்கள் அகற்றப்படும் என்கின்றனர்.
![தூத்துக்குடி: அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் ஸ்மார்ட் சிட்டி திட்டம்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/18/b618b634144fe6344c64bd500b267606_original.jpg)
திட்டம் நிறைவேற்றப்படும் போது முதலிலேயே இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு சாலை அமைத்து இருந்தால் திட்ட செலவு குறைந்து இருக்கும், இப்போது மீண்டும் செலவுதான் எனவும் அரசு துறைகளிடயே ஒருங்கிணைப்பு இல்லாமையே இதற்கு காரணம் எனவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிடயிட்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion