மேலும் அறிய

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் உற்பத்தி செய்யும் 5 யூனிட்டுகள் உள்ளன. 1979, 1980,1982 இந்த வரிசையில் முதல் மூன்று அனல் மின் உற்பத்தி அலகுகளும் தொடங்கப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளை கடந்து, அதன் ஆயுட்காலம் முடிந்தும் தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. 1991,92 இந்த வரிசையில் 4-வது மற்றும் 5-வது மின் உற்பத்தி அலகுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் 30 ஆண்டுகளை கடந்து இந்த யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாள்தோறும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி  செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து பிரிவுகளும் அவ்வப்போது ஏற்படும் கொதிகலன் பழுது, நிலக்கரி பற்றாக்குறை போன்ற காரணங்களால் மின் உற்பத்தி நிறுத்தப்படும். மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் நிலை உள்ளது

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மிகவும் பழமையான இந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. சமீபகாலமாக மின்சார தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தி எந்திரங்களை இயக்கி வருகின்றனர். மேலும் மத்திய சுற்றுச்சூழல் துறை அனல்மின்நிலையங்களில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகையால் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

இதுகுறித்து தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை என்ஜினீயர் கிருஷ்ணகுமார் கூறும் போது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இருந்து கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுப்பதற்காக, புளு கியாஸ் டிசல்பியூசேசன் என்ற நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் கந்தக டை ஆக்சைடு வெளியேறுவதை தடுக்க முடியும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது. அதன்பிறகு பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணி முழுமையாக முடிக்கப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பணியை முடிப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் மாசு இல்லாத அனல்மின்நிலையமாக மாறும் என்று கூறினார்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

இதுகுறித்து தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, தூத்துக்குடி அனல்மின் நிலையம் அவ்வப்போது பழுது ஏற்படுவதும், சீரமைக்கப்பட்டு இயக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ள நிலை உள்ளது, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. தற்போது ரூ.500 கோடி மதிப்பீட்டில் கந்தக டை ஆக்சைட் வெளியேற்றத்தை தடுக்க தொழில்நுட்பம் மேற்கொள்ளப்படும் என்கின்றனர். அனல்மின் நிலையங்களை தவிர்த்து அரசு மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கந்தக டை ஆக்சைடு வெளியேற்றத்தை தடுக்க ரூ. 500 கோடியில் திட்டம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget