மேலும் அறிய
தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?
தூத்துக்குடி நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா? Thoothukudi government guest house damage built by Kamaraj public request govt take action TNN தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/333e6aeefd2803ff37028c70aacb89971692734137416109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காமராஜர் கட்டிய விருந்தினர் மாளிகை
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது அரசு சுற்றுலா மாளிகை. பொதுப்பணித்துறை சார்பில் இந்த சுற்றுலா மாளிகை கட்ட 01.08.1960 அன்று அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்ட சுற்றுலா மாளிகையை 12.12.1961-ல் காமராஜர் திறந்து வைத்தார். கடற்கரையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த விருந்தினர் மாளிகையில் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய அதிகாரிகள் என, பலரும் தங்கியுள்ளனர்.
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/df356c85567e781ea6d412673bfd1fde1692733560219109_original.jpeg)
விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிதாக கூடுதல் சுற்றுலா மாளிகை கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டு, அதுவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த சுற்றுலா மாளிகையின் பயன்பாடு படிப்படியாக குறைந்தது. சுற்றுலா மாளிகைக்கு அருகே மீன்களை உலர்த்துவதால் ஏற்படும் வாசனை காரணமாக, இங்கு தங்குவதற்கு பலரும் தயக்கம் காட்டினர். தூத்துக்குடி வரும் முக்கிய பிரமுகர்கள் தனியார் விருந்தினர் மாளிகைகள், துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்கத்துவங்கியதும் படிப்படியாக விருந்தினர் மாளிகை கைவிடப்பட்டது.
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/90066327e82a28b9d97e130ef21e59411692733639402109_original.jpeg)
இந்நிலையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே கூடுதல் சுற்றுலா மாளிகை கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அப்போதும் இப்போதும் சமூகநலத்துறை அமைச்சராக இருக்கும் கீதாஜீவன் திறந்து வைத்தார். போதிய வாகன நிறுத்தகம் இல்லாதது, நெரிசல் மிகுந்த சாலையில் அமைக்கப்பட்டு உள்ள புதிய விருந்தினர் மாளிகையாகி போனது.இந்த புதிய சுற்றுலா மாளிகை பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையின் பயன்பாடு முற்றிலும் நின்றுபோனது.
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/2efbb3790915a28a7a7ce89306de0e741692733586771109_original.jpeg)
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் முகாம் அலுவலகம் கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022-ம் ஆண்டு மே மாதம் வரை நான்கு ஆண்டுகள் அங்கு செயல்பட்டது. ஒரு நபர் ஆணையத்தின் காலம் முடிந்த பிறகு சுற்றுலா மாளிகை பழையபடி பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் கட்டிடம் பாழடைந்து வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டிடம் ஏற்கெனவே உடைந்து சேதமடைந்து, சுற்றிலும் முட்செடிகள் சூழந்து காட்சியளிக்கிறது. பழைய பிரதான சுற்றுலா மாளிகையும் ஆங்காங்கே சேதமடைய தொடங்கியுள்ளது.
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/da93a02480a89ca1a4892ba71aa6a5b31692733667042109_original.jpeg)
ஒரு நபர் ஆணையத்தின் காலம் முடிந்த பிறகு சுற்றுலா மாளிகை பழையபடி பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் கட்டிடம் பாழடைந்து வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கூடுதல் சுற்றுலா மாளிகை கட்டிடம் ஏற்கெனவே உடைந்து சேதமடைந்து, சுற்றிலும் முட்செடிகள் சூழந்து காட்சியளிக்கிறது. பழைய பிரதான சுற்றுலா மாளிகையும் ஆங்காங்கே சேதமடைய தொடங்கியுள்ளது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட வலுவான கல் கட்டிடமாக இருப்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் உள்ளது.
![தூத்துக்குடியில் காமராஜர் கட்டிய அரசு விருந்தினர் மாளிகை; களை இழந்த சோகம் - அரசு கண் விழிக்குமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/23/37baef57171beeabd3f6e4f80688a0a41692733824815109_original.jpeg)
அங்கிருந்த பூங்கா பகுதி சுவடே தெரியாத அளவுக்கு சேதமடைந்து காணப்படுகிறது. தூத்துக்குடி நகரின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த சுற்றுலா மாளிகையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion