மேலும் அறிய
Advertisement
கனமழையால் தண்ணீர் சூழ்ந்த தூத்துக்குடி - மாநகரில் உள்ள பள்ளிகளை திறப்பதில் சிக்கல்
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள சி.வ. அரசு மேல்நிலைபள்ளி வளாகம் தண்ணீரில் மிதக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் பல இடங்களில் மழைநீர் வடியாததால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சுமார் 400 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் டேங்கர் லாரிகள் மூலமும் மழைநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. இதனை தவிர பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டும், தற்காலிக கால்வாய்கள் அமைக்கப்பட்டும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நடவடிக்கைகள் காரணமாக மழைநீர் குறையும் நிலை ஏற்படும் போது மீண்டும் மழை வந்து தண்ணீரின் அளவு அதிகரித்து விடுகிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்யும் மழை மற்றும் ஊற்றெடுக்கும் நிலத்தடி நீர் காரணமாக தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள்காலனி, ராம் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், பிரையன்ட் நகர், சிதம்பரநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சூழ்ந்து 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒரு வாரத்துக்கு மேலாக முடங்கியுள்ளனர்.
இதேபோல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம்,இஎஸ்ஐ மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் வடியாமல் நிற்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மையவாடி பகுதியில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் உடல்களை அடக்கம் செய்ய வருவோர் மற்றும் தகனம் செய்ய வருவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இதேபோல் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்களில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தூத்துக்குடி விஇ சாலையில் உள்ள சி.வ. அரசு மேல்நிலைபள்ளி வளாகம் தண்ணீரில் மிதக்கிறது. ஒரு வாரத்துக்கு மேலாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பாசிப்படர்ந்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகம் போன்ற முக்கிய கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக திண்டாடி வருகின்றனர்.
இதேபோன்று பெருமாள்புரம் பகுதியில் உள்ள பாரதியார் வித்யாலயம் பள்ளி வளாகம் முழுவதும் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றாலும் தண்ணீர் குறைந்தபாடில்லை.மழை எச்சரிக்கை காரணமாகவும், வளாகங்களில் தேங்கியுள்ள மழைநீரை கருத்தில் கொண்டும் தூத்துக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. மழைநீர் வடியாமல் அப்படியே நிற்பதால் பள்ளியை மீண்டும் திறப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 20 ஆண்டுக்கு முன்வரை 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். தனியார் கல்வி நிறுவனங்களின் தாக்கத்தால் மாணவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி தற்போது 200 க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருவதாக சொல்லப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை குறைய துவங்க பள்ளி வளாகம் அரசு அலுவலகங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது, முதலில் ஒரு துறை மட்டுமே செயல்பட துவங்கிய பள்ளி வளாகத்தில் கல்வித்துறையின் முக்கிய அலுவலகங்கள் நிறைந்து உள்ளது. இதனால் பள்ளி வளாகம் குறைய துவங்கி உள்ளது. மேலும் மழை வந்தால் தத்தளிக்கும் இப்பள்ளியை சீரமைக்கவும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என்கின்றனர் இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion