மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடியில் தொடர் மழை...தனித்தனியாக ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் அமைச்சரும் மேயரும்
தூத்துக்குடி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை. தனித்தனியாக ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் அமைச்சரும் மேயரும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது.
அதேபோன்று கடந்த 2021 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான முத்தம்மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தபால் தந்தி காலனி, தனலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு ஒரு மாத காலமாக வெளியே வர இயலாத சூழல் நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் நிரந்தரமாக இந்த பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கழிவு நீரோடைகள் புதிய சாலைகள் மழை நீரை உறிஞ்சும் பம்பு ஹவுஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் விரிவாக்க பகுதியில் ஏறத்தாழ 80% அளவில் மழைநீர் தேங்கவில்லை ஆனாலும் தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாததால் மழை நீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் 10 டேங்கர் லாரிகள் மூலம் மழை நீரை உறிஞ்சி அகற்றப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் காலி மனைகளில் தேங்கி நிற்கும் மழை நீரையும் மாநகராட்சி நிர்வாகம் ஜேசிபி மூலம் வெட்டிவிட்டு மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று காலி மனைகளில் மழைநீர் தேங்காதவாறு மணல் நிரப்பி மேம்படுத்தவும் மழை நீரை வெளியேற்றவும் தனியார் காலி மனை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மழை நீரை அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பிலேயே மழைநீர் அகற்றப்பட்டு அதற்கான செலவு செலவு நில உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் 300 பேர் தினமும் தூத்துக்குடி மாநகர பகுதியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர் என மாநகராட்சி சார்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு மழை நீரை அகற்றவும் புதிதாக சாலை அமைக்கவும் நோய் தொற்று பரவாமல் தடுக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு மழை நீரை அகற்றவும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறும் போது, "தூத்துக்குடி மாநகரில் புவியீர்ப்பு விசையின் காலாகவே மழை நீர் வழிந்து விட வேண்டும், மோட்டார் பம்பு பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்தோம். மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் தூர்வாரி சுத்தம் செய்தோம் சிறிய கால்வாய்களை விரிவு படுத்தியும் தூர்ந்து போன பழைய வடிகால்களை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தும் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மழைநீர் தானாக கால்வாய்களுக்கு செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியில் தற்போது இது வரும் மழை காரணமாக 80% வரை மழை நீர் தேங்கவில்லை. எந்தப் பகுதியில் மோட்டார் பம்பு பயன்படுத்தவில்லை புவியீர்ப்பு விசையில் தானாக வடிகால்கள் வழியாக மழை நீர் வழிந்தோழிகிறது, இதுதான் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் முத்து கூறும் போது, "தூத்துக்குடி மாநகரில் அதிக அளவு மழை இதுவரை பெய்யவில்லை. தற்போது பெய்த மழையின் காரணமாக சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து அகற்ற வேண்டும் என தெரிவித்த அவர், அதிக மழை பெய்தாலும் மழை நீர் தேங்காத வண்ணம் பொதுமக்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேங்கியுள்ள மழை நீர் பகுதிகளில் சுகாதாரப் பணிகளில் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion