மேலும் அறிய

Tuticorin Accident: தூத்துக்குடி ஆட்டோ விபத்துக்கு காரணம் இதுதான்... பள்ளி சென்ற முதல் நாளே குழந்தை இறந்த சோகம்...!

அசம்பாவிதம் நடந்தபிறகு அரசு விழித்து கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதும், சில காலத்திற்கு பின் அவை காற்றில் பறப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

செய்துங்கநல்லூர் அருகே இன்று பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆட்டோவில் வந்த 7 குழந்தைகள் காயம் அடைந்தனர். 

Tuticorin Accident: தூத்துக்குடி ஆட்டோ விபத்துக்கு காரணம் இதுதான்... பள்ளி சென்ற முதல் நாளே குழந்தை இறந்த சோகம்...!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளிக்கு தினம் தோறும் பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்று வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகன் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். அனவரதநல்லூர் பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர் போன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. செல்போன் ஆட்டோவின் உட்புறத்தில் விழுந்ததை எடுக்க குனிந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பலியான மாணவன் செல்வநவீன் கடந்த வாரம் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு இன்று தான் முதல் நாளாக பள்ளிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகி 7 பேரும் காயமடைந்தனர். இதில் சில மாணவ, மாணவிகள் இன்று தான் பள்ளிக்கு முதல் நாள் சென்றனர். விபத்து குறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tuticorin Accident: தூத்துக்குடி ஆட்டோ விபத்துக்கு காரணம் இதுதான்... பள்ளி சென்ற முதல் நாளே குழந்தை இறந்த சோகம்...!

ஆட்டோ ஒட்டுனர்கள் மிக கவனமுடன் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும்போது, ஆட்டோகளை இயக்க வேண்டும், பெற்றோர்கள் பிள்ளைகளை ஆட்டோவில் ஏற்றிவிட்டால் கடமை முடிந்ததாக இருக்ககூடாது, பெரும்பாலும் பள்ளி இறுதி நேரத்தில் பிள்ளைகளை அவசர அவசரமாக தயார் செய்வதும், உரிய நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற அதிவேகமும் விபத்திற்கு காரணமாக உள்ளது,  அதிக எண்ணிக்கையில் பிள்ளைகளை ஏற்றி செல்வதற்கு காரணமாகும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தபிறகு அரசு விழித்து கொண்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதும், சில காலத்திற்கு பின் அவை காற்றில் பறப்பதும் வாடிக்கையாகிவிட்டது  என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tuticorin Accident: தூத்துக்குடி ஆட்டோ விபத்துக்கு காரணம் இதுதான்... பள்ளி சென்ற முதல் நாளே குழந்தை இறந்த சோகம்...!

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget