(Source: ECI/ABP News/ABP Majha)
பணம் பெற்று கொண்டு வீட்டு வரைபட நகல் வழங்காத கடையநல்லூர் நகராட்சிக்கு 8,000 அபராதம்
’’மனுதாரின் மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவு முழுவதையும் 8000 ரூபாய் கொடுக்கவும், தவறினால் 6% வட்டியுடன் அத்தொகையை வழங்கவும் கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிப்பு’’
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கணேசன் என்பவர் தனது மகனின் கல்வி கடனுக்காக வங்கியை அணுகி உள்ளார், வங்கி கடன் வழங்க வீட்டு வரைப்பட நகலை கேட்டு உள்ளது. இதனால் கடையநல்லூர் நகராட்சிக்கு ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி வீட்டு பிளான், வரைபட நகல் கேட்டுள்ளார். ஆனால் நகராட்சி நிர்வாகம் பணத்தை பெற்றுக் கொண்டு கணேசனுக்கு வரைபடம் கொடுக்கவில்லை என்பதால் 10.11.2016 அன்று நகராட்சி ஆணையருக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதற்கும் நகராட்சி நிர்வாகம் எந்த பதிலும் கொடுக்கவில்லை, என்பதால் மனுதாரர் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் மனுதாரருக்கு நகராட்சி நிர்வாகம் 30 தினங்களுக்குள் வீட்டு பிளான் கொடுக்க வேண்டும் என்றும், மேலும் அந்த வீட்டு பிளான் ஆனது மனுதாரர் மகனின் கல்வி கடன் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் என்பதால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5000 வழக்குச் செலவு முழுவதையும் சேர்த்து மொத்தம் 8000 ரூபாய் கொடுக்க வேண்டும், அதனை கொடுக்க தவறினால் 6% வட்டியுடன் கொடுக்க வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
திருநெல்வேலி நுகர்வோர் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக நகராட்சி ஆணையர் மதுரையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து மேல்முறையீடு மனுவை விசாரித்த மாநில நுகர்வோர் ஆணையம் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவை உறுதி செய்துள்ளது.
திருச்சியில் இருதரப்பினரிடையே மோதல் - காவல்துறை ரோந்து வாகனத்தை தாக்கிய 12 பேர் கைது
இயற்கை வளத்தை காப்பாற்ற ஒன்றிணைந்து போராட்டத்தில் குதித்த பாமக, விசிக கட்சிகள்...!
நகராட்சி ஆணையர் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 4ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தும் உத்தரவானது பிறப்பித்து உள்ளது. இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா கூறும் பொழுது, இந்த உத்தரவானது தாமதமான உத்தரவு என்றாலும் வரவேற்கத்தக்கது, தற்போது தான் உத்தரவிற்கான நகல் தங்களிடம் கிடைத்து உள்ளது. மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி வீட்டு வரைபட நகலை வழங்குவதோடு தற்போதைய நாள் வரை கணக்கிட்டு 6% வட்டியுடன் தொகையை வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ஆகிவிட்டதால் நகராட்சி ஆனையர் மனுதாருக்கு மாவட்ட நுகர்வோர் ஆணையம் பிறபித்த உத்திரவின்படி நஷ்ட ஈடு தொகை மற்றும் பிளான் வழங்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் செயலாற்று மனு போடவுள்ளோம் என தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா - தடுப்பூசி சான்று, RTPCR சான்று அவசியம்