மாநில அரசு மாஞ்சோலை விவகாரத்தில் நேர்மையாக இல்லை - டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
”நீதிமன்றத்தில் அரசு கொடுத்த அறிக்கையில் இருந்தே அரசின் பார்வையில் கோளாறு உள்ளது.மாஞ்சோலை விவகாரத்தில் அரசு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்”
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி நெல்லை கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகம் பேரணியாக வந்தனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியபோது தொழிலளர்கள் ஆற்றுக்குள் குதித்ததில் 2 வயது குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் மாஞ்சோலை தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த தினத்தின் 25வது ஆண்டை முன்னிட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இன்று கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த தொழிலாளர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைதொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இடத்தில் நினைவஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாஞ்சோலை தொழிலாளர்கள் அனைவரையும் வெளியேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் பிபிடிசி நிர்வாகத்தின் மூலையாக மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது. மாஞ்சோலை மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம். மாஞ்சோலை மக்களுக்கு நிவாரணம் வழங்குகிறோம்.,காடுகளை வளர்க்கிறோம் என நீதிமன்றத்தையும் ஏமாற்றுகின்றனர்.மாஞ்சோலை மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய சதி நடக்கிறது.
மாஞ்சோலை மலை கிராமத்திலேயே அவர்களது வாழ்வாதாரத்தை அமைக்கவேண்டும் என்பதே ஒற்றை குறிக்கோள். வன உரிமை சட்டம் 2006 ன் படி அவர்களுக்கு மாஞ்சோலையில் நிலம் வழங்கவேண்டும் அவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்றத்திலும் பெரிய விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கை இல்லை. நீதிமன்றத்தில் அரசு சிறிய அதிகாரியை வைத்து அறிக்கை தருகிறார்கள் என்றால் அரசின் பார்வையில் கோளாறு உள்ளது. மாஞ்சோலை மக்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உள்நோக்கம் உள்ளது என்று கூறினேன், அதன்படி நேற்று அமைச்சர் மதிவேந்தன் மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா அமைக்கப்படுவதாக சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிளாலர்களை வெளியேற்றிவிட்டு புலியை வளர்ப்பது ஏன்? எலியை வளர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசு மாஞ்சோலை விவகாரத்தில் நேர்மையாக இல்லை. மாஞ்சோலை மக்களை அரசு ஏளனமாக பார்க்கிறது.
மாஞ்சோலை பகுதியில் இருந்து எந்த தொழிலாளியும் வெளியேறவில்லை. மாஞ்சோலை மக்களை வெளியேற அச்சுறுத்தி வருகின்றனர். 25 ஆண்டுக்கு முன்னர் திமுக அரசு எப்படி இருந்ததோ அதே போல் தான் அரசு இப்பவும் உள்ளது. மாஞ்சோலை விவகாரத்தில் அரசு நிதானமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் ஏனோதானோவென முடிவெடுக்க கூடாது. மாஞ்சோலைக்கு சுற்றுலா வருபவர்கள் அந்த சுற்றுலாவை தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 99 வருட குத்தகைக்கு தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகமான பிபிடிசிக்கு கொடுத்த குத்தகையை ஏற்கனவே நிறுத்தி வைத்திருக்கலாமே? குத்தகை காலம் முடியும் வரை அந்நிறுவனம் தொழிலாளர்களை சுரண்ட ஏன் அனுமதி கொடுத்தார்கள்?
தொழிலாளர்களுக்கு இப்போது எந்த முறையை கையாண்டார்களோ அதன்படி பிபிசிடி நிறுவனத்தையும் கையாண்டிருக்க வேண்டுமல்லவா? அப்படி என்றால் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், பணமில்லாத ஏழைகளுக்கு எதிராகவும் அரசு செயல்படுகிறது. எனவே மாஞ்சோலை விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்க விட மாட்டோம் என்று தெரிவித்தார்