மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில்,  இருவர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்

கொள்ளை வழக்கில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த இரண்டு  முக்கிய குற்றவாளிகள் அகதிகள் போல வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் பதுங்கியிருந்த நிலையில் அந்த  இருவரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில்  நடந்த உள் நாட்டு போரின் போது இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த நிலையில் தற்போது இலங்கை நாட்டில் உள்ள பலரும் மீண்டும் அகதியாக வந்து கொண்டுள்ளனர். இலங்கையில் தொடர்ந்து  நிலவும் பொருளாதார நெருக்கடி காரணகாக அங்கு  அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து உள்ளதை அடுத்து  அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி தமிழகத்துக்கு தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி குழந்தைகள் உட்பட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு நபர்கள் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த மணல் தீடையில் தஞ்சம் அடைந்தவர்களை  இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு கடலோர  காவல் குழுமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கம்போல இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் வருவோரை நடைமுறை விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில்  அனுமதிப்பது போன்று இந்த எட்டு பேரையும்  அகதிகளாக பதிவு செய்து தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அகதிகளாக வந்த எட்டு பேரில் இரண்டு பேரை கொள்ளை வழக்கில் இலங்கை போலீசார் தேடி வந்துள்ளனர். அந்நாட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க   அகதிகளாக   தமிழகம் வந்திருப்பது யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.

அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

இதில் அகதிகள் போர்வையில் வந்த கிருபாகரன், சந்திரகுமார் ஆகிய இரண்டு நபர்கள் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் ஒரு நகை கடையின் உரிமையாளரை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கானது அந்நாட்டு நீதிமன்றத்தில்  நிலுவையில் இருந்து வரும்  நிலையில் அங்கிருந்து தப்பி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்தது அந்நாட்டு போலீசாரால் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்களை கைது செய்ய இலங்கை போலீசார்  தமிழக காவல்துறையின் உதவியை நாடினர்.  அவர்களின் வழக்கு விபரம் க்யூ ப்ராஞ்ச் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும்  மண்டபம் அகதிகள் மறுவாழ்வு மையத்தில் அகதிகளாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து,   முகாமில் இருந்த அவர்கள் இருவரையும்  கைது செய்த சட்டம் ஒழுங்கு போலீசார் மண்டபம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகதிகளாக வந்த இலங்கை கொள்ளையர்கள்! அலேக்காக தூக்கிய தமிழ்நாடு போலீஸ்.!!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள தமிழர்கள் சட்டவிரோதமாக கடல்வழியில் உயிரைப் பணயம் வைத்து படகுகளில் தமிழகத்திற்கு அகதிகளாக வருவோர்களை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைத்து அவர்களுக்கு பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் இந்திய அரசு செய்து வருகிறது. ஆனால்,இந்த சலுகையை தவறாக பயன்படுத்தி இலங்கையில் பெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு அகதியை  போன்று அப்பாவிகளாக வந்து தமிழகத்திற்குள்  ஊடுருவியுள்ளது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதே வழியை பின்பற்றி பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் ஊடுருவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, இனி அகதிகளாக வருவோர் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இருவரும் விசாரணைக்கு பின்னர் இரண்டு நபர்களையும் அவருடைய சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்புகிறார்களா?  அல்லது இங்கேயே வழக்கு ஏதும் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்களா என்று போலீஸாரின் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி, மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Embed widget