மேலும் அறிய
Advertisement
ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து... தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த புண்ணியவானின் வரலாறு
குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி கடந்த 24.03.2020-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தூத்துக்குடியில் வாழ்ந்த ஜான்சாந்தகுரூஸ் பெர்னாண்டஸ் தம்பதிகளுக்கு மகனாய் 15.11.1869 ஆம் ஆண்டு பிறந்தார் குரூஸ்பெர்னாண்ட்ஸ். தூய சவேரியார் பள்ளியில் அன்றைய மெட்ரிகுலேசன் படிப்பை 1885இல் முடித்தார். முதலில் சர்தார் சேட்டிடமும். பின்னர் வால்காட் நிறுவனத்திலும் எழுத்தராக பணியமர்ந்தார். வால்காட் பஞ்சுக் கம்பெனியில் வரும் வருமானத்தினை சேர்த்து ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காகச் செலவழித்தவர் குருஸ் பெர்னாண்டஸ். தொபியால்அம்மாளை மணந்து இல்லறம் நடத்தி, ஏழு குழந்தைகளின் தந்தையானார். தமது கடின, உழைப்பினால் வால்கார்டு நிறுவனத்தில் ராலி ஆபீஸ் புரோக்கராகவும், பின்னாளில் மேலாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
பொதுத்தொண்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டு விளங்கிய குருஸ்பெர்னாண்டஸ் 21.12.1909 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகராட்சித்தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது, தூத்துக்குடி மக்கள் சுத்தமற்ற கிணற்றுக் குடிநீரைத்தான் குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர்.
காலரா, பிளேக் போன்ற நோய்களால் மரணங்களுக்கும், நோய்க்கும் சுகாதரமற்ற குடிதண்ணீர் தான் காரணம் என்று உணர்ந்து குரூஸ் பெர்னாண்டஸ் சுத்தமான குடிநீர் வழங்கிடுவதே தனது முதற்கடமை எனச்செயல்பட்டார்.
இதற்காக இலங்கை கொழும்பு துறைமுகத்திலிருந்து 5 கப்பல்கள் மூலம் குடிநீர் கொண்டுவந்து நகர மக்களுக்கு வழங்கினார். இதனால் முழுமையாக குடிநீப்பற்றாக்குறையைத் தீர்க்கமுடியவில்லை. எனவே கடம்பூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினார். ஆனால் ஓர் அறிவிப்புடனே இத்தண்ணீர் வழங்கப்பட்டது. “இந்தத் தண்ணீர் குடிக்க மற்றும் சமைக்க மட்டுமே” என்பதே அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது மட்டுமல்லாது தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் வட்டத்தெப்பம் மற்றும் வட்டக் கிணறுகள் அமைத்து ஐந்து மைல் தூரத்திலுள்ள கோரம்பள்ளம் குளத்திலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வரச்செய்தார். கிணறுகளில் இங்குக்குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அறிவிக்கச் செய்தார்.
தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சனைக்கும் தேவைக்கும் நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என்பதே பெர்னாண்டஸ் அவர்களது சிந்தையில் பூத்த வீந்தைத் திட்டம்தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர்த்திட்டம். நிரந்தரமாக, நாள்தோறும், முறையாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில், வல்லநாடு அருகில் கிணறுகள் தோண்டி, அங்கிருந்து தண்ணீரைப்பெரிய பெரிய குழாய்கள் மூலமாகத் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து சேமித்து நகரமக்களுக்கு வழங்கும் திட்டம், மக்களிடம் இத்திட்டம் நிறைவேற ரூ.355 வரி வசூலித்தபோது, என்றோ வருவதாகச்சொல்லப்படும் திட்டத்திற்கு இன்றே வரி தருவது நியாயம் அல்ல என மறுத்தவர் ஏராளம். எதற்கும் கவலைப்படாமல் எடுத்தகாரியத்தை முடிப்பதில் தீவிரமாகச்செயல்பட்டார் குரூஸ் பெர்னாண்டஸ்.
இத்திட்டத்தைக் குரூஸ் பெர்னாண்டஸ் தூத்துக்குடி, நெல்லை, பாளை நகராட்சிகளின் கூட்டுக்குடி நீர்த்திட்டமாகவே உருவாக்கியிருந்தார். எனவே பாளை நகராட்சிகளும் தொடக்க நாள்களில் தங்களின் பங்களிப்பாக வரி செலுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு திட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். எனவே மொத்த நிதிச்சுமையும் தூத்துக்குடி நகராட்சி தலையில் விழுந்தது. தூத்துக்குடி குடிநீர்த்திட்டம் 18.5 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது . பின் பணி துவங்கியது. ஆனாலும் இதில் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டது.
முதல் உலகப்போர் காரணமாகத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் 27.05.1919 ஆம் ஆண்டில் குரூஸ் பொர்னாண்டஸ் தூத்துக்குடி நகராட்சித்தலைவராக நான்காவது முறையாகப் பதவி ஏற்றார். தடைப்பட்டிருந்த தூத்துக்குடி குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த பெரும் முயற்சி எடுத்தார். திட்டச்செலவு அதிகமாகிப்போனதால் அரசு தயக்கம் காட்டியது. தொடர்ந்து திட்டம் செயல்படாமல் முடங்கிப் போனது. இந்தக்காலக் கட்டத்தில்தான் 1922ஆம் ஆண்டு இராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான கிறிஸ்தவப் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்ட மேலவைக்கு குரூஸ்பெர்னாண்டஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பதவி மூலம் தமது கனவுத்திட்டமான தூத்துக்குடி குடிநித்திட்டத்திற்கு மீண்டும் உயிர்தரப் பயன்படுத்தினார்.
இன்று தூத்துக்குடிககு தாமிரபரணி திட்டம் செயல்படுகிறது என்றால் அதற்கு விதை போட்டவர் குருஸ் பர்ணான்டஸ் தான்.
ஆனாலும் தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த வட்டக்கிணறுகளில் ஒன்றிரண்டு தவிர மற்றவை அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போனது தான் பெரும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று.
குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி கடந்த 24.03.2020-ல் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் பின் அரசு விழாவாக, கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், 2021ல் திமுக ஆட்சி வந்தது. அப்போது, மணி மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். பூங்கா அருகில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி மாதம் 21ந் தேதி நடைபெற்றது. ரூ. 77.87 லட்சம் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு 376 சதுர அடி பரப்பில் முழு உருவச்சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion