நாளை மின் தடை: தூத்துக்குடி, நெல்லை, வள்ளியூர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்! முக்கிய அறிவிப்பு.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி, நெல்லைபகுதிகளில் மின் வாரிய மாதாந்திர பராமரிப்பு காரணத்தால் நாளை மின் தடை அறிவிக்கப்படுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், நகர்ப்புற துணைமின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 4.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு வடக்கு காட்டன்ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், சி.ஜி.இ. காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியாநகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோட்டங்களுக்கு உட்பட்ட பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ஜெயசீலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தியாகராஜநகர், பொருட்காட்சி திடல், கொக்கரகுளம், பழையபேட்டை துணைமின் நிலையங்களிலும் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் பின்வரும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B. காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச்.காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கி காலனி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெல்லை டவுன், மேல ரதவீதி மேல் பகுதிகள், தெற்கு ரதவீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரதவீதி வடக்கு பகுதிகள், பழையபேட்டை, காந்தி நகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் SN ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தர தெரு, பாரதியார் தெரு, C.N.கிராமம், குறுக்குத்துறை, கருப்பன்துறை, டவுன் கீழ ரதவீதி வீதி, போஸ் மார்க்கெட், A.P.மாடத் தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி.தெரு, வையாபுரிநகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊர்உடையான் குடியிருப்பு பகுதிகள். திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணாரப்பேட்டை முழுவதும், இளங்கோநகர், பரணிநகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதிநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பணகுடி மற்றும் கூடன்குளம் துணைமின் நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம். கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார் புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















