மேலும் அறிய

நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம்

நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம் , புது பொலிவு பெறப்போகிறது.

பாளையங்கோட்டையில் 8-வது நூற்றாண்டில் பாண்டியர்கள் காலத்தில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தி உள்ளனர். அதன்பிறகு பாளையக்காரர்களும், பின்பு ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி உள்ளனர்.
நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம்

பல வரலாற்று சிறப்புகளை கொண்டுள்ள இந்த கோட்டை பழங்கால ஆட்சியின் அடையாளமாக மிஞ்சி நிற்கிறது. இந்த கோட்டை மீது இயங்கி வந்த மேடை காவல் நிலையமும் மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதால், தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது.
நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம்

பாளையங்கோட்டையில் பழங்கால கோட்டை கட்டிடத்தின் கீழ் பகுதியில் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், விநாயகர் கோயில் மற்றும் சில கடைகள் உள்ளன. இந்த பகுதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேல் பகுதி வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேடை காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு உள்ளிட்ட சில சிறப்பு பிரிவுகள் இங்கு இயங்கின. அவை இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர், மேல் பகுதி பராமரிப்பின்றி கிடந்தது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது.
நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம்

மேடை போலீஸ் ஸ்டேசன்’ பாளையங்கோட்டையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. ‘மேடை தளவாய்’ என்ற பெயர் பொதுவாக திருநெல்வேலி வட்டாரங்களில் பிரசித்தம். அதனோடு பெயர் ஒற்றுமை உடைய இந்த காவல் நிலையம், பாளையங்கோட்டை நகரின் வ.ஊ .சி மைதானம் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது . 

இன்று எஞ்சி இருக்கும் கொத்தளத்தின் மேல் சமீப காலம் வரை காவல் நிலையம்  இயங்கிக் கொண்டிருந்தது. ஏறத்தாழ முப்பது அடி உயரமுள்ள கோட்டைச் சுவரின் மீதான கொத்தளத்தில் அமையப் பெற்றதால் ‘ மேடை’ என்ற அடைமொழி இந்தக் காவல் நிலையத்தோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. பேராசிரியர் தொ.ப அவர்கள் பாளையங்கோட்டையை ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கோட்டை நகரமாகத் தனது ‘ பாளையங்கோட்டை- ஒரு மூதூரின் வரலாறு’ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். கோட்டையின் அமைப்பு குறித்தும் அதன் எஞ்சிய பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும் அந்த நூலில் தொ. ப அவர்கள் அற்புதமாக விவரித்திருக்கின்றார்.

இந்த கோட்டை கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
நூற்றாண்டை கடந்து நிற்கும் பாளையம்கோட்டை மேடை காவல் நிலையம்

மாவட்ட நிர்வாகம் இதன் மீது தனி கவனம் செலுத்தி, கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மையை, அடையாளத்தை பாதுகாத்து வழங்கிட சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வந்த நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, கோட்டைக்கு நேரில்  சென்று ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர், “நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் பாளையங்கோட்டை வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டும் விதமாக கோட்டை புதுப்பிக்கப்படும்” என்றார். மாவட்ட ஆட்சித்தலைவர் கோட்டையை நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், தற்போது அங்கு பராமரிப்பு பணிகள் துவங்கி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget