மேலும் அறிய

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி.. திமுக ஆட்சிதான் திராவிட மாடல்.. தூத்துக்குடியில் பேசிய கனிமொழி!

இன்றைக்கு சிலர் கல்லூரிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தடைபோடுவதற்காக நுழைவு தேர்வு என்ற தடைகற்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும், புதியதாக யாரும் திராவிட ஆட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. தெரிவித்தார்

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி..  திமுக ஆட்சிதான் திராவிட மாடல்.. தூத்துக்குடியில் பேசிய கனிமொழி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு இளநிலை மாணவ-மாணவியர்கள் 412 பேருக்கும், முதுநிலை மாணவ-மாணவியர்களுக்கும் 110 பேருக்கும் பட்டம் வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி மாணவிக்கு மேடையில் இறந்து கீழே இறங்கி கனிமொழி எம்.பி. பட்டம் வழங்கினார்.

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி..  திமுக ஆட்சிதான் திராவிட மாடல்.. தூத்துக்குடியில் பேசிய கனிமொழி! 

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி பேசுகையில் மாணவர்களால் எதையும் சாதிக்க முடியும், அவ்வாறு சாதித்த பின்னர் நாம் தான் என்ற மன நிலைக்கு மாணவர்கள் போய்விடக்கூடாது. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் படிக்க கூடாத என்ற காலம் இருந்தது. அதிலும் பெண்கள் படிக்க கூடாது என்று கால கட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்த்து போராடி கல்வி, உயர்கல்வி எல்லோருக்கமானது என்ற சூழலை திராவிட இயக்கமும், திராவிட இயக்கதலைவர்களும், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் உருவாக்கி தந்துள்ளார்கள். கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நிறைய பாடுபட்டு இருக்கிறார். இந்த மேடையில் கட்சி மாச்சரியங்களை தாண்டி  அவருக்கு எனது நன்றியை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி..  திமுக ஆட்சிதான் திராவிட மாடல்.. தூத்துக்குடியில் பேசிய கனிமொழி!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் தான் அரசு கல்லூரிகள் அதிகமாக வரத்தொடங்கியது. மாணவர்கள் கல்வி கற்க வர வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கம் கல்லூரிகளை உருவாக்கியது. ஆனால் இன்றைக்கு சிலர் கல்லூரிக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தடைபோடுவதற்காக நுழைவு தேர்வு என்ற தடைகற்களை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

கடம்பூர் ராஜூவுக்கு நன்றி..  திமுக ஆட்சிதான் திராவிட மாடல்.. தூத்துக்குடியில் பேசிய கனிமொழி!

உங்கள் (மாணவர்) கையில் தான் அடுத்த கட்ட போராட்டம் இருக்கிறது. அது நம்முடைய கடமை. நமக்கு கிடைத்து விட்டது, அடுத்த தலைமுறை, எதிர்கால தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும். நம்முன்னோர்கள் நமக்கு இந்த பாதையை உருவாக்கி தந்து இருப்பது போல இந்த கல்வி அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க போராட வேண்டும். அதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு திசைகளில் விரிந்து இருக்க கூடிய உலகமாக இருக்கிறது. மாணவர்களுக்கு தங்களுக்கு இருக்க கூடிய ஆர்வத்தினை வளர்த்து கொள்ள வேண்டும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள், உங்களால் சாதிக்க முடியும், தடைகள் என்பது தேவையில்லை, உங்களால் எந்த தடையையும் தாண்ட முடியும் சாதிக்க முடியும், தன்னம்பிக்கையுடன் சமூகம், இந்த நாட்டை, உலகத்தினை வழி நடத்த வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget