மேலும் அறிய

SDPI: அரசியல் பழிவாங்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பவே என்ஐஏ சோதனை: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

அரசியல் பழிவாங்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பவே என்ஐஏ சோதனை நடத்தப்படுவதாக எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசியல் பழிவாங்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பவே என்ஐஏ சோதனை நடத்தப்படுவதாக எஸ்.டி.பி.ஐ. கண்டனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்களின் வீடு என தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘’எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்கள். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒன்றிய அரசின் ஏவல் நடவடிக்கையாகும்.

கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேர்தல் அரசியல், போராட்ட அரசியல் மட்டுமின்றி பேரழிவு காலங்களிலும் மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது. ஆளும் அரசுகளின் கவனத்துக்கு மக்கள் பிரச்சினைகளை கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது. இது தமிழ்ச் சமூகம் அறிந்த விசயம்.

பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்ற கொள்கை முழக்கத்தோடு ஜனநாயக முறையில் செயல்பட்டுவரும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மிகத் தெளிவானது. இந்த சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும், மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் ஒன்றிய அரசு தனது ஏவல்துறையான என்.ஐ.ஏ. மூலம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். 

SDPI: அரசியல் பழிவாங்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பவே என்ஐஏ சோதனை: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

ஒரு தெளிவான, வெளிப்படையான மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுவரும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வீட்டில் நடைபெற்றுவரும் இத்தகைய சோதனை நடவடிக்கை என்பது ஜனநாயக விரோதமானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் நடைபெற்றுவரும் இத்தகைய அடக்குமுறைகளை சட்டரீதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சி எதிர்கொள்ளும். ஒன்றிய அரசின் ஏவல்துறையான என்.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்ச்சமூகமும், அனைத்து ஜனநாயக சக்திகளும் வலுவாக குரலெழுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.’’

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget