மேலும் அறிய

Nellai: நாங்குநேரி அருகே ரயில்வே கேட் அறையை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள்

ஏதேனும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது ரயில்வே துறையை சேதப்படுத்த மர்மநபர்கள் மேற்கொண்டுள்ள சதி திட்டமா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே  நெடுங்குளம் ரயில்வே கேட் உள்ளது. அதில் கேட் கீப்பராக விஷ்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். குறிப்பாக நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் இந்த வழியாக செல்வதால் இந்த கேட் அடிக்கடி மூடி திறக்கப்படுவது வழக்கம். நெடுங்குளம், தாழைகுளம், உண்ணங்குளம், அம்பலம், மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த ரயில்வே கேட் வழியாக தான் சென்று வருகின்றனர். 

Nellai: நாங்குநேரி அருகே ரயில்வே கேட் அறையை அடித்து நொறுக்கி தீ வைக்க முயன்ற மர்ம நபர்கள்

இந்நிலையில் (22ம்தேதி) அதிகாலை விஷ்ணு பணியில் இருக்கும் போது அங்கு மர்ம நபர்கள் இருவர்  கையில் அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்துள்ளனர். பின் அவர்கள் அத்துமீறி கேட் கீப்பர் இருந்த அறைக்குள் புகுந்துள்ளனர். அப்போது விஷ்ணுவை அவதூறாக பேசி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து  தப்பி ஓடியுள்ளார்.  இதனை அடுத்து மர்ம நபர்கள் அந்த அறையில் இருந்த இரண்டு தொலைபேசிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தங்கள் கையில் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை அந்த அறையில் ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிகிறது. இதனிடையே அதிர்ஷ்டவசமாக தீப்பிடிக்கவில்லை என்பதை தொடர்ந்து அங்கிருந்து மர்ம நபர்கள்  தப்பி ஓடியுள்ளனர்.முன்னதாக தப்பியோடிய விஷ்ணு இதுகுறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த உடன் அங்கு விரைந்த ரயில்வே போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் எதற்காக இது போன்ற செயலில் ஈடுபட்டனர். ஏதேனும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது ரயில்வே துறையை சேதப்படுத்த மர்மநபர்கள் மேற்கொண்டுள்ள சதி திட்டமா? என பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget