மேலும் அறிய

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

National Youth Festival 2020 - 2021 நிகழ்வில் மத்திய அரசின்  யோகா போட்டியின் நடுவராகவும், விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா யோகாசன போட்டியில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று உள்ளார்

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திக்கேயன்-தேவிபிரியா தம்பதியரின் 12 வயது மகள் பிரிஷா, தனது 1 வயதில் இருந்தே யோகா கலையை கற்றுதந்த தன்னுடைய பாட்டியை குருவாக ஏற்றுக்கொண்டார். பாட்டியை தொடர்ந்து தாயிடம் இருந்தும்  யோகாசனங்களை கற்றுள்ளார்.  5 வயதில் இருந்தே மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய சர்வதேச அளவிலான யோகாசனங்கள் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் வந்துள்ளார். இதனால் 100க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள் இவரது வீட்டை அலங்கரிக்கின்றன. 

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

கண்டபேருண்டாசனத்தை 1 நிமிடத்தில் 16 முறைகள் விரைவாக செய்து முதல் உலக சாதனையையும், லோகஸ்ட் ஸ்கார்ஃபியன் போஸ் யோகாசனத்தை 3.02 நிமிடத்தில் செய்து 2 வது உலக சாதனையையும், ராஜகபோட்டாசனத்தை 5.13 நிமிடத்தில் 3 வது உலக சாதனையையும் புரிந்து உள்ளார். இவ்வாறு தற்போது 70 உலக சாதனைகள் புரிந்து உலக அளவில் சிறு வயதில் அதிக உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை குளோபல் யூனிவர்சிட்டி வழங்கியுள்ளது. 

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

உலகிலேயே முதல் இளம் வயது யோகா ஆசிரியர்க்கான சான்றிதழை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதே போல உலகிலேயே முதன் முறையாக இளம் வயதில் மூன்று முனைவர் பட்டங்கள் அமெரிக்கா & இந்திய பல்கலைக்கழகங்கள் பிரிஷாவிற்கு வழங்கி கெளரவித்து உள்ளனர். தான் கற்று உணர்ந்த யோகாவின் நன்மைகளை தன்னோடு மட்டுமின்றி பிறகுக்கும் எடுத்து கூறும் வகையில், நெல்லையில் உள்ள எய்ட்ஸ் ஹோம், பார்வையற்றோர் பள்ளி, முதியோர் இல்லம் என பல்வேறு தரப்பினருக்கு சென்று சேரும் வகைதில் இலவச யோகா விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார், கடந்த 2 வருடங்களாக பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச யோகா வகுப்பு எடுத்து தனது பார்வையற்ற மாணவர் கணேஷ்குமாரை யோகாவில் உலக அளவில் சாதனை படைக்க வைத்து உள்ளார். 

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

இவ்வாறு யோகாவில் மட்டும் தனது திறமை என்றில்லாமல் எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளை துல்லியமாக கூறுவது, தன் கண் பார்வையால் சிறு ஸ்பூனை வளைக்கும் திறமை, எதிரில் நிற்பவரின் உடலில் உள்ள நோய்களை துல்லியமாக கூறுவது, கண்களை கட்டுக் கொண்டு சாலையில் சைக்கிள் ஓட்டுவது, யோகாசனத்தில் கண்களை கட்டிக் கொண்டு ரூபிக்ஸ் க்யூப்களை சரி செய்வது, கண்களை கட்டி கொண்டு படிப்பது, எழுதுவது, தண்ணீர் பலவித யோகாசனத்தில் நீச்சல் செய்வது, கண்களை கட்டி கொண்டு ஸ்கேட்டிங் ஓட்டியபடி பந்தை தட்டி செல்வது என பல்வேறு திறமைகளில் உலக அளவில் சாதனை புரிந்து உள்ளார், 

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

இவரின் சாதனைகளுக்காக இவர் பெற்ற பதக்கங்கங்கள் மட்டுமின்றி பட்டங்களும்  ஏராளம், யோகா ராணி, யோகா கலா, யோகா ஸ்ரீ, யோக ரத்னா, ஆசனா ஸ்ரீ, லிட்டில் யோகா ஸ்டார், பாரதி கண்ட புதுமைப்பெண், அன்னை தெரசா விருது, சக்சஸ் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, அப்துல்கலாம் விருது, இளம் சாதனையாளர் விருது என பல்வேறு விருதுகளையும் பெற்று பெருமை தேடி தந்துள்ளார். இவர் மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல்வேறு பிரிவில் தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், உலக சாம்பியன் பட்டங்களையும் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார், 

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

போட்டித்தேர்வுகளிலும் பிரிஷாவை பற்றி படிக்கும் அளவிற்கு இடம் பிடித்து உள்ளார். முன்னாள் பாண்டிச்சேரி லெப்டினன்ட் கவர்னர் கிரண்பேடி பிரிஷாவை பலமுறை பாராட்டி அதிசயக்கத்த தனி திறமை உடைய குழந்தை என கூறி பிரிஷாவின் புகைபடத்தையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். யோகா செய்வது, சொல்லி கொடுப்பது என்றில்லாமல் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் யோகா - இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம் என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டு உள்ளார். ஆசனங்கள் செய்யும் முறை, ஒவ்வொரு ஆசனங்களும் எவ்வளவு முறை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும், இதனால் ஏற்படும் நன்மைகள், உடலில் உள்ள நோய்களுக்கு ஏற்றவாறு என்னென்ன ஆசனங்கள் செய்யலாம் என தானே ஆசனங்களை  செய்து அசத்திய புகைப்படங்களையும் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதியுள்ளார், இந்த புத்தகத்தை இந்தியா பிரைம் அவார்டுக்கு தேர்வு செய்துள்ளனர். National Youth Festival 2020 - 2021 மத்திய அரசின்  யோகா போட்டியின் நடுவராகவும், விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா யோகாசன போட்டியில் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று உள்ளார்.

12 வயதில் 70 உலக சாதனைகள்...! யோகாவில் அசத்தும் நெல்லை சிறுமி பிரிஷா...!

பிரிஷாவின்  வீட்டில் உள்ள ஒரு அறை முழுவதும் சூழ்ந்துள்ள பதக்கங்களே இவரின் அசாத்திய திறமைகளை கூறும், அந்தளவிற்கு பட்டங்களையும் பதக்கங்களையும் குவித்து உள்ள பிரிஷா இது ஒரு சிறிய சாக்லேட் அளவு சாதனையே, இன்னும் அதிக அளவு சாதனைகள் படைக்க வேண்டும், அதோடு மற்றவர்களுக்கு உதவி செய்வதே எனது வாழ்நாள் சாதனை என்றும் கூறி வருகிறார். தனது அடுத்த பிறந்த நாளுக்குள் 70 உலக சாதனையை 100 உலக சாதனையாக மாற்றுவேன் எனவும் கூறி வருகிறார். அதே போல் ஒலிம்பிக்கில் யோகா இடம்பிடித்தால் அதிலும் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தருவேன் என கூறுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget