கோரமண்டல் விபத்திற்கு நிர்வாக அலட்சியமின்மையே காரணம் - எஸ்டிபிஐ மாநிலத்தலைவர் முபாரக் பேட்டி
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை கொச்சைப்படுத்தியிருப்பது இந்தியாவின் பிரதமர் என்று சொல்வதை விட கேவலம் வேறு எதுவும் இருக்காது. இது மாற்றப்பட வேண்டிய விசயம் மட்டுமல்ல, வீழ்த்தப்பட வேண்டிய விஷயம்.
நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சி வளப்படுத்த தலைவர்கள் சங்கமம் என்கிற நிகழ்வை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அதன்படி நெல்லையில் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”கோரமண்டல் ரயில் விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது. உலகம் நவீனமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இந்த தருவாயில் கூட இது போன்ற விபத்து நடைபெறுவது என்பது நிர்வாக அலட்சியமின்மையே காரணம் என கருதுகிறோம். ’
இந்த காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒடிசாவிற்கு தமிழ்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர்களை மீட்பு பணிகளுக்காக அனுப்பியிருக்கிறது. இந்த வேகமான போர்க்கால நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். இந்த பாதிப்பில் இருந்து அந்த மக்களை மீட்டிடுவதற்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசும், ஒன்றிய அரசும் எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். எஸ் டி பி ஐ கட்சியும், நாட்டினுடைய ஜனநாயக அரசியல் சக்திகளும் தொடர்ந்து சிறையில் வாடுகிற 37 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கையை கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு அந்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இந்தியாவின் மகள்கள் டெல்லியின் வீதியிலே கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலை குனிவு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை கொச்சைப்படுத்தியிருப்பது இந்தியாவின் பிரதமர் என்று சொல்வதை விட கேவலம் வேறு எதுவும் இருக்காது. இது மாற்றப்பட வேண்டிய விசயம் மட்டுமல்ல, வீழ்த்தப்பட வேண்டிய விசயம். 2024 இல் இதை சாதித்தால் மட்டுமே இந்தியாவிற்கு விடியல் என்று சொல்கிற நிலை உள்ளது. தென்னிந்தியாவில் குஜராத் மாடல் என்று சொல்லப்பட்ட கர்நாடக தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டிருக்கிறது. 2024 ஆம் தேர்தலிலும் பாஜக வீழ்த்த முடியாத சக்தி அல்ல என்றும் மாறாக 2024 பாரதிய ஜனதா கட்சி வீழ்த்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் நாடாளுமன்ற கட்டிடம் ஆர் எஸ் எஸ் அலுவலகமாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக விமர்சனம் செய்த அவர் மதச்சார்பின்மையை நிலைநாட்ட ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்